“பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு”

 

தேர்தல் அதிகாரி ராஜினாமா

பாகிஸ்தானில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்தது உண்மை தான் என்று சொல்லித் தேர்தல் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் தான் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அங்கே எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.

இம்ரான் கான் கட்சி சின்னம் முடக்கப்பட்ட நிலையில், அவரது கட்சியினர் சுயேச்சையாக களமிற்கி அதிகப்படியான இடங்களில் வென்றனர். இருப்பினும், அவரது கட்சிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் தேர்தல்

Pakistan

அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சியைப் பிடித்தன. இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டினர் இது தொடர்பாக அவர்கள் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதற்கிடையே பாகிஸ்தானின் தலைமைத் தேர்தல் ஆணையரும், தலைமை நீதிபதியும் தேர்தலில் வாக்கெடுப்பில் மோசடியில் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் மூத்த தேர்தல் அதிகாரி அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். ராவல்பிண்டி முன்னாள் கமிஷனர் லியாகத் அலி இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார். பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக இம்ரான் கான் கட்சியினர் அந்நாடு முழுக்க பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், லியாகத் அலி இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக லியாகத் அலி சத்தா தெரிவித்தார். ராஜினாமா: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த தவறுகளால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை நீதிபதிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

Supporters of Khan's Pakistan Tehreek-e-Insaf (PTI)

நாட்டின் முதுகில் குத்திவிட்டு யாராலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. நான் செய்த அநீதிக்கு நான் தண்டிக்கப்பட வேண்டும், இந்த அநீதியில் ஈடுபட்ட மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் எனக்குப் பயங்கரமாக அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். ஆனால், கடைசியில் பொதுமக்களிடம் இதை சொல்லலாம் என முடிவு செய்துவிட்டேன்.

இதன் காரணமாகவே இப்போது உங்களிடம் இதைக் கூறுகிறேன். அனைத்து அதிகாரிகளிடமும் நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக எதையும் செய்யாதீர்கள்” என்று அவர் தெரிவித்தார். “முதல் முறையாக..” ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள்.. தேர்தல் ரிசல்ட் சொல்லும் பாடம் இதுதான்

மறுப்பு

அதேநேரம் தலைமைத் தேர்தல் ஆணையர் மீது சத்தா கூறிய குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ராவல்பிண்டி ஆணையர் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முழுமையாக நிராகரிக்கிறது.

தேர்தல் முடிவுகளை மாற்ற எந்த அதிகாரியும் அறிவுறுத்தவில்லை. தேர்தல் நேர்மையான முறையில் தான் நடந்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அங்குப் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த 2022இல் பதவியை இழந்தார்.

அதன் பிறகு அங்குத் தொடர்ந்து பல அரசியல் குழப்பங்களும் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டன. இந்தச் சூழலில் இம்ரான் கான் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, பல வழக்குகளில் அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அந்த தண்டனை அறிவிப்பு வந்த கொஞ்சக் காலத்திலேயே அரசு முன்கூட்டியே கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஆண்களின் நிர்வாண திருவிழா இனிமேல் நடக்காதாம்!

Next Story

காஸா போர் நிறுத்தம்?