நெருப்பாகிய ஐயா சம்.!

-நஜீப்- 

கடந்த காலங்களில் நாம் நிறையவே தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விவகாரங்களில் பெரியவர் சம்பந்தன் ஐயாவை விமர்சித்து வந்திருக்கின்றோம். அவர் சில நபர்களினால் அரசியல் ரீதியில் பிழையாக வழி நடாத்தப்பட்டும் வந்திருக்கின்றார் என்றும் நாம் குற்றம் சாட்டியும் இருக்கின்றோம்.

இப்போது சம்பந்தன் ஐயா யதார்த்தத்தை புரிந்து கொண்டிருக்கின்றார் என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்து. அரசியல் யாப்புக்கு அப்பால் சம்பிரதாயத்துக்கு முன்னுரிமை என்ற தனது நிலைப்பாடு  தற்போதய அரசியல் நாகரிகத்துடன் இசைந்து போகாது என்பதனையும் அவர் புரிந்திருக்கின்றார்.

இதனால்தான் புதிய தலைவர் சிரிதரனுக்கு கட்சி மாநாட்டை திட்டமிட்ட படி நடாத்தும் படியும் பதவிகளுக்கு தேவைப்பட்டால் வாக்கு நடாத்தி நிருவாகிகளைத் தெரியு செய்யும் படி ஐயா அறிவுரை கொடுத்திருக்கின்றார். என்றும் செய்திகள்.

இது சம்பிரதாய கதைகளைச் சொல்லி கதிரையில் அமர நிலைப்போருக்கு கசப்பாக இருந்தாலும் இன்றைய தமிழரசு அரசிலில் தவிர்க்க முடியாத ஒரு நிலை இதுதான். எனவே பினாமிகள் கலையெடுக்கப்பட வேண்டிய காலமும் இதுதான். அப்போதுதான் தலைமைகள்  சமூக உணர்வுடன் அரசியல் பண்ண முடியுமாக இருக்கும்.

நன்றி: 18.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சஜித் ஐதேக.வுக்கு!

Next Story

சந்திரிகா மறுப்பு!