டுவிடருக்கு எதிரான தண்டனை!

-யூசுப் என் யூனுஸ்-

கடந்த முறை அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஜோ பைடன் வெற்றி பெற்றதும். அந்தப் பின்னணியில்  டொனால்ட் ட்ரம் ஆதாவலர்களும் அவரும் வன்முறையாக நடந்து கொண்டு அதிகார மாற்றலுக்கு நெருக்கடிகளைக் கொடுத்ததும் நமக்கு நினைவில் இருக்கின்றது.

Twitter penalized for delayed response to Trump account search.....

இது தொடர்பான விசாரணைகள் தற்போது அமெரிக்காவில் துவங்கி இருக்கின்றது. ட்ரம் பற்றிய தகவல்களை தமக்குத் தருமாறு அரசு கடந்த ஜனவரியில் டுவிடரைக் கோட்டது. அதனைத் தரமுடியாது என்று டுவிடர் நிருவாகிகள் அப்போது அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு நீதிமன்றத்தின் உதவியை நாடியது. நீதி மன்றம் அதனைக் கொடுக்குமாறு உத்தரவு கொடுத்தது.

Tweets From Trump And Other Leaders That Violate Twitter's Rules Will Get A Warning Label

அப்படி நீதி மன்றம் உத்தரவு கொடுத்தும் அதனை வழங்க மூன்று நாள் தாமதமானதால் நீதி மன்றம் உடனே கொடுக்க முடியுமாக இருந்தும் அதனை வழங்க டுவிடர் நிறுவனம் மூன்று நாள் எடுத்துக் கொண்டதால் மூன்று இலட்சத்து ஐம்தாயிரம் (350000) அமெரிக்கா டெலர்கள் வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் தண்டனை வித்திருக்கின்றது. இலங்கை நாணயப்படி இந்தத் தொகை பதினொரு கோடி இருபது இலட்சம்.

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரஷ்யா:லூனா-25   சந்திரயானுக்கு முன்னரே தரையிறக்கம்?

Next Story

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: அடுத்தது என்ன?