செல்லப் பிராணியும்! செல்லப் பிள்ளையும்!

தேர்தல் காலங்களில் கோட்டபாய ராஜபக்ச மேடைகளில் எவ்வாறு மா அரைத்தாரோ ,அந்த மாவைத் தான் இப்போது அரைக்கின்றார் எனவும் நாடளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள்,பால்மா , எரிவாயு உள்ளிட்ட பிரச்சினைகள் பல காணப்படுகின்றபோதும் அதற்கு தீர்வில்லை என குறிப்பிட்ட அவர் மக்கள் வேலைக்கு சென்று உழைக்காமல் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலை பிற்போட்டீர்கள். இங்கு சபைகள் செயற்படாமல் உள்ளன. நாட்டின் வளங்களை பாதுகாப்போம் என்று கூறி வந்த நீங்கள் இப்போது மின் கேரவலபிட்டிய மின் நிலையம் அமெரிக்காவுக்கும்,கொழும்பு துறைமுகத்தை சீனாவுக்கும் விற்றுவிட்டீர்கள்.

இந்தியா தான் எமக்கு உண்மையான நண்பன். பல்வேறு வகையில் எமக்கு உதவி செய்து வருவதுடன் எமது கடன்களை அடைப்பதற்கும் அவர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வழங்கப் விற்கப்படுவதால் எமது நாடு சீனாவின் தனி நாடு ,தனி பாஸ்போட் என்ற பிராந்திய நிலையமாக மாறும் எனவும் அவர் சுட்டிக்காடினார்.

அத்நேரம் சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி, அதேபோல இந்தியாவுக்கு நாம் செல்லப்பிள்ளை. ஆகவே யாரை அணைக்க வேண்டும் என்று நாம்சிந்திக்க வேண்டும் எனவும் அவ்ர் கூறினார்.

முதலீடு என்ற பெயரில் நாட்டை விற்க வேண்டாம். இன்னும் ஒரு சில தினங்களில் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை ஏற்பட போகிறது. எனவே முதலில் அதற்கு வழியை தேடுமாறும் நாடளுமன்ற உறுப்பின இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்

Previous Story

பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் விரிவுரையாளர் முகம் சுழிக்கும் செயல்! 

Next Story

தற்கொலை: சாராவினால் பயிற்றப்பட்ட 16 பெண்கள்