கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் அதிகளவான சிறுவர்கள்  போஷாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது.

 16.6 பில்லியன் ரூபா நிதி

இதனையடுத்தே அரசு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதற்கமைய, தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Education Ministry S New Announcement

இந்த உணவு வழங்கும் திட்டத்துக்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறையின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Story

அழைப்பும் நிராகரிப்பும்!

Next Story

யானை பார்த்த குருடனும் அனுர இந்திய விஜயமும்!