இஸ்மாயில் ஹனியே படுகொலை:பின்னணியில் அமெரிக்கா

பகீர் கிளப்பும் ஈரான் ஈரான் நாட்டில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த ஹனியே படுகொலைக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் சூளுரைத்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களாக மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக். மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் அங்கே முழுக்க முழுக்க பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. காசாவில் நடத்தும் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வந்தாலும் கூட இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருந்தது.

Dissed by Saudi Arabia, lectured by Egypt: U.S. diplomacy meets Mideast  reality - POLITICO

இதனால் அங்கே மோதல் தொடர்ந்தது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்தது. ஏற்கனவே அவர் மீது கடந்த 2004 முதல் பல முறை கொலை முயற்சி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இருப்பினும், அதில் எல்லாம் அவர் தப்பி இருந்தார். ஆனால், இந்த முறை அவர் மீதான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார். படுகொலை: ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள இஸ்மாயில் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றிருந்தார்.

அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், அதில் இஸ்மாயில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். இதை ஹமாஸ் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை போரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது இவ்வளவு பெரிய தாக்குதலை அமெரிக்காவுக்கு தெரியாமல் அல்லது அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேலால் நடத்திய இருக்க முடியாது என்பதே ஈரானின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

நொடிகளில் எல்லாம் ஓவர்

 இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது.. இதற்கும் அமெரிக்காவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

இந்தத் தாக்குதல் மூலம் இஸ்ரேல் உலகிற்கு என்ன சொல்ல வருகிறது என எனக்கு தெரியாது. ஆனால், போர் நிறுத்தம் கட்டாயம் தேவைப்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.

காசா மட்டுமின்றி, வடக்கு லெபனான் ஹிஸ்புல்லாவாக இருந்தாலும் சரி, செங்கடலில் ஹவுதிகளாக இருந்தாலும் சரி, மோதல் வராமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். ஈரான், சிரியா, ஈராக் என எல்லா நாடுகளிலும் அதையே தான் செய்து வருகிறோம். மீண்டும் போர் அல்லது பதற்றம் ஏற்படாது என்பதை உறுதி செய்ய போர் நிறுத்தம் தேவை” என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம் அமெரிக்காவின் இந்த விளக்கத்தை ஏற்க ஈரான் மறுக்கிறது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மரணத்திற்கு அமெரிக்காவை குற்றம் சாட்டிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதர், அமெரிக்காவின் ஒப்புதல் மற்றும் உளவுத்துறை ஆதரவு இல்லாமல் இதுபோன்ற ஒரு தாக்குதலை இஸ்ரேலால் நடத்தி இருக்க முடியாது என்கிறார்.

Previous Story

மு.கா ஊடாகவாவது நான் பாராளுமன்றம் போயாக வேண்டும்! -ஞானசாரர்-

Next Story

சஜித்-நாமல் இரகசிய சந்திப்பு