அனுராவை எதிர்க்க மெகா கூட்டணி அவசியம்!

 -நஜீப் பின் கபூர்-

இது ராஜபக்ஸ-சஜித் கூட்டணி பற்றிய புதிய எண்ணக்கரு!

ஐ.ம.சக்தி சஜித் ஜனாதிபதி மொட்டு கட்சி நாமல் பிரதமர்!

Sajith challenges Mahinda with four questions

“நாம் சொல்கின்ற இந்த கூட்டணி

அமையுமாக இருந்தால்

ஐதேக.வினரும் தமிழ் முஸ்லிம்

தரப்பினரும்  இயல்பாகவே

இந்த கூட்டணிக்குள் வந்து விடுவார்கள்.

அப்போது இன்று ஜேவிபி.யுடன் உறவுகளை

வளர்த்துக் கொள்ள முனைகின்ற

மேற்கத்திய நாடுகளும் இந்தியாவும் கூட

அவர்களைக் கைவிட்டுவிடுவார்கள்.

ஜேவிபியை எதிர்க்க நாட்டில் ஒரு செல்வாக்கான

அரசியல் இயக்கம் இன்மையால்தான்

இன்று அனைவரும் அவர்கள்

கலாடியின் போய் நிற்க்கின்றார்கள்.

இதுதான் உண்மை-யதார்த்தம்.”

President Premadasa extolled by President Rajapakse | Sri Lanka Guardian

பொதுவாக தேர்தல் காலங்களில் கூட்டணிகள் வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். பலயீனமான கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இருக்கின்ற எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைத்து மெகா கூட்டணிகளை அமைத்துக் கொள்கின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இப்படியான ஒரு கூட்டணியின் தேவை இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம். இப்படியான ஒரு ஆலோசனையை முன்வைக்க நமக்குத் தனிப்பட்ட காரணம் ஒன்றும் இருக்கின்றது. தொடர்ச்சியாக நாம் இந்தப் பகுதியில் அரசியல் விமர்சனங்களை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

நாம் அரசியல் கருத்துக்களை சொல்கின்ற போது நடுநிலை பேன வேண்டியது நமக்குத் தார்மீகப் பொறுப்பு என்று வைத்திருந்தாலும் அந்தக் கருத்துக்கள் பக்கச்சார்பாக பார்க்கப்படுக்கின்ற சந்தர்ப்பங்களும் விமர்சனங்களும் நமக்கு வருவதுடன். கடந்த காலங்களில் நமக்கு நெருக்கமான ஒரு சிறுபான்மை அரசியல் பிரமுகர் நம்முடன் தொடர்பு கொண்டார். எமக்கும் அவருக்கும் ஒரு காலத்தில் இருந்த அரசியல் நெருக்கங்கள் செயல்பாடுகள் தொடர்ப்பில் நினைவு படுத்திவிட்டு, ஏன் எங்களை தொடர்ச்சியாக காயப்படுத்தி வருகின்றீர்கள்? உங்களுடைய விமர்சனங்கள் பற்றி நாம் பல சந்தர்ப்பங்களில் கட்சிக்குள் கலந்து பேசியும் இருக்கின்றோம் என்று நட்புணர்வுடன் நமக்கு சுட்டிக்காட்டி இருந்தார்.

அவரது அந்தக் கருத்திலிருந்து நமது பார்வையில் விமர்சனங்களில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்ப்பது எமக்கு நன்றாகப் புரிகின்றது. நாம் கருத்துக்களை நடுநிலையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக காகம் கருப்பு என்பவர்களுடனும் வெள்ளை என்று வாதிடுவோரையும் திருத்திப்படுத்த முடியுமா?. அதுவும் சரி இதுவும் சரி என்று விமர்சனம் எப்படி நியாயமாக முடியும்.? யதார்த்தங்களையும் சொல்கின்ற போது அது ஒரு தரப்புக்கு திருப்தியையும் மற்றுமொரு தரப்புக்கு வேதனையையும் வலியையும் கொடுக்கும்-கொடுக்கின்றது என்பது நமக்கு புரிகின்றது.

அதற்காக யதார்த்தங்களை மறைத்து சமநிலை என்பதற்காக அவரும் சரி இவரும் சரி என்று எமக்கு கருத்துச் செல்ல முடியாது. இந்தக் குறிப்புக்களுடன் பாதிக்கபடும் தரப்பு சார்பில் சில ஆலோசனைகளை  கொடுக்கலாம் அப்போது அவர்களுக்கான வெற்றி வாய்ப்புக்கள் பற்றி சிலாகித்த நமக்குக் கருத்துக்களை விமர்சனங்களையும் செய்ய முடியுமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில்தான் நாம்  அனுராவை எதிர்க்க மெகா  கூட்டணி ஒன்றின்  அவசியம் பற்றி இந்த வாரம் பேச எதிர்பார்க்கின்றோம்.

Foxes from Medamulana and Kollupitiya have the last laugh - CounterPoint

இலங்கையில் இருக்கின்ற ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள் தேர்தலில் ஜேவிபி. தலைமையிலான என்பிபி. க்கு வாய்ப்புக்கள் அதிகம் என்று செய்திகளைச் சொல்லி வருகின்றன. இப்போது இந்தக் கருத்துக்கள் நமது எல்லையையும் மீறி சர்;வதேச அளவிலும் பேசப்பட்டு வருகின்றன. அதனால்தான் அனுராவின் வாய்ப்புப் பற்றி இந்திய ஊடகங்கள் ஐம்பது பிளஸ் என்று செய்தி சொல்லி இருந்தது. மேற்கு நாடுகளும் அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது போன்று அன்றாடம் பெலவத்தையில் உள்ள ஜேவிபி செயலகத்திற்கு வந்து போய் சந்திப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிப் பார்க்கின்ற போது வெறுமனே மூன்று சதவீதி வாக்குப் பலத்தையும் வைத்திருக்கின்ற ஜேவிப்பிக்கு இந்தியாவும் மேற்கு நாடுகளும் ஏன் இந்த அங்கிகாரத்தைக் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் நாம் அரசியல் ரீதியில் செய்கின்ற விமர்சனங்கள் போலத் தான் அவையும் அiமைந்திருக்கின்றது. அதிலும் அவர்களுக்கு ஒரு வலி ஏற்படுகின்றது.  இப்போது வாய்ப்புக்கள் பற்றி சொல்லப்படுக்கின்ற கதைகளைப் பார்ப்போம்.

பொதுவாகத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் அனுர தரப்புக்கு ஐம்பது சதவீத மக்கள் ஆதரவு என்பது பகிரங்க இரகசியம் என்ற நிலையில் இருக்கின்றது. இதில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக இருந்தால் அனுராவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அவரது எதிரிகளுக்கு அவசியம் என்ற நமது கருத்து அமைகின்றது. இதற்கான நியாயங்கள் என்ன என்பதனை இப்போது பார்ப்போம்.

ஆளும் மொட்டுக் கட்சி இன்று பல கூறுகளாக பிரிந்து நிற்கின்றது ரணில் அணி. ராஜபக்கஸ தரப்பு. அதிலும், மஹிந்த பிரிவு பசில் தரப்பு நாமல் சகாக்கள், மதில் மேல் நிற்போர் என்றும் பல பிரிவுகள் என்று பல குழுக்கள் அங்கு இருப்பதும் தெளிவாகத் தெரிகின்றது. பிரதான எதிரிணியான சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி. அதிலும் பல குழுக்கள் முரண்பாடுகளை உடையோர் செயல்பட்டுக்  கெண்டிருகின்றார்கள்.

Only Namal comes forward to accept Sajith's challenge

தமிழர் தரப்பிலும் பல அரசியல் குழுக்கள் செயல்பாடுகளை உடையோர், மலையத்திலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அப்படித்தான். பல குழுக்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் ஆளும் மொட்டுத் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடுமையான மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த அரசியல் பின்னணியில் அனுர தலைமையிலான ஜேவிபி அல்லது என்பிபி. தனிக்குதிரையாக களத்தில் நிற்பது போல தெரிகின்றது. பொதுவாக அவர்கள் 50 பிளஸ். சஜித்துக்கு 32. ரணில்-ராஜபக்ஸாக்களுக்கு 15 ஏனையோருக்கு 03 சதவீதம் என்று ஜனாதிபதித் தேர்தலில் இருப்பதாக செய்திகள்.

இந்தக் கருத்துடன் எமக்கு உடப்பாடு கிடையாது. அதனை நாம் முன்பும் சொல்லி இருக்கின்றோம். அனுர முதலாம் இடத்தில் இருக்கின்றார்கள் என்பது உண்மை. எமது கணக்குப்படி என்பிபி.க்கு 39. சஜித்துக்கு 31. ரணில்-ராஜபக்ஸாக்களுக்கு 25. ஏனையோருக்கு 05. சதவீதம். இது இன்றைய நிலை.

எனவே அரசியல் ரீதியில் அனுரகுமாரவை தோற்கடிக்க வேண்டுமாக இருந்தால் நாட்டிலுள்ள அனைத்து சக்திகளும் என்பிபி. க்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நிலையில்தான் இவர்கள் அவர்கள் வளர்ச்சியை செல்வாக்கை தடுக்கலாம். அரசியலில் என்ன வேண்டுமாக இருந்தாலும் நடக்கலாம். கிரியும் பாம்பும் போல இருந்த மஹிந்தவும் ரணிலும் கூட ஒன்றிணைய முடியுமானால் இதுவும் சாத்தியமே.

நடைமுறையில் இதில் பெரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தமது உண்மையான பலம் பலயீனத்தை புரிந்து கொண்டால் நாம் சொல்கின்ற மெகா கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை. எளிமையான கணக்குப்படி ஜேவிபிக்கு நாற்பது (40) சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் ஏனைய அணைத்து அரசியல் சக்திகளிடம் அறுபது (60) சதவீதம் பலம் இருக்கின்றது. இந்த அனைத்து சக்திகளை ஓரணியில் இணைக்க முடியாவிட்டாலும் அதில் ஒரு ஐம்பது (50) சதவீதத்தை இணைக்க முடியுமாக இருந்தாலும் இது சாத்தியம்.

சில சமூக ஊடகங்கள் சொல்வது போல ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் செல்வாக்கு மக்கள் மத்தியில் கிடையாது. நமது கணிப்புப்படி வெரும் மூன்று சதவீத வாக்குகள் கூட நாட்டில் ரணிலுக்ககு இல்லை. ஆனால் மொட்டுக் கட்சி என்னதான் பிளவுகளுக்கு இலக்காகி இருந்தாலும் அவர்களுக்கு இன்னும் கணிசமான ஒரு கூட்டம் ஆதரவாகத்தான் இருக்கின்றார்கள் என்பது எமது கருத்து. அதனை ஒரு 20 சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் சஜித்-ராஜபக்ஸாக்களுக்கு ஒரு கூட்டணிக்கு வர முடியுமாக இருந்தால் நேருக்கு நேர் மோதல் என்ற வகையில் ஒரு போட்டி நிலையை அனுராவுக்கு கொடுக்கலாம்.

இன்று நாட்டில் இருக்கின்ற அரசியல் களநிலவாரப்படி ரணில்-ராஜபக்ஸாக்கள் கூட்டணிக்கு இடமிருக்கின்றது. அந்தக் கூட்டணி அமைவதில் கூட நெருக்கடிகள். ரணில் அரசியல் செல்வாக்கு கடந்த பொதுத் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் பார்த்து விட்டார்கள். எனவே ஐதேக.வுடன் கூட்டணி போடுவதில் அர்த்தம் இல்லை என்பது மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனாலும் ரணிலிடம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் ஒரு கூட்டம் ரணிலை வேட்பாளராகக் கொண்டு வர முனைகின்றார்கள் அல்லது நாடகமாடுகின்றார்கள். இது அதிகாரம் மிக்க பதவி ரணில் கையில் இருப்பதால் பிழைத்துக் கொள்ள இவர்கள் போடுகின்ற வேசம். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்தால் இவர்களின் உண்மையான உருவத்தை கண்டு கொள்ள முடியும்.

நாம் இங்கு சொல்கின்ற ஜேவிபி.யை அரசியல் ரீதியில் எதிர் கொள்வதாக இருந்தால் சஜித்-ராஜபக்ஸாக்களின் மெகா கூட்டணி ஒன்று காலத்தின் கட்டாயம். இப்படியான ஒரு கருத்து இன்றுவரை அரசியல் வட்டாரங்களில் பேசப்படாமல் இருப்பதற்கு காரணம், இது சாத்தியம் அற்ற ஒரு ஒரு சிந்தனை என்பதாகும். ஆனால் ஜேவிபி.யை எதிர்ப்பதில் பொதுக் கருத்துக்களுடன் இருப்பவர்களுக்கு (சஜித்-ராஜபக்ஸ) இந்த கூட்டணியை பற்றி சிந்திப்பதில் பெரிய சிக்கல்கள் ஏதும் கொள்கை ரீதியில் கிடையாது.

File:NPP Logo.png - Wikimedia Commons

ஆளும் தரப்பை விமர்சிப்பதை விட இன்று சஜித் தரப்பினர் அனுர தலைமையிலன குழுவையே விமர்சிக்கின்றனர். அதே போன்று பிரதான எதிரணியை விமர்சித்து அரசியல் பேசுவதை விடுத்து ஆளும் மொட்டுத் தரப்பினரும் அனுரவைத்தான் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விமர்சனங்கள் கூட அனுர தலைமையிலான தரப்பினரை மக்கள் மத்தியில் ஹீரோவாக்கி விட்டிருக்கின்றது.

நாம் சொல்கின்ற இந்த கூட்டணி அமையுமாக இருந்தால் ஐதேக.வினரும் தமிழ் முஸ்லிம் தரப்பினரும்  இயல்பாகவே இந்த கூட்டணிக்குள் வந்து விடுவார்கள். அப்போது இன்று ஜேவிபி.யுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள முனைகின்ற மேற்கத்திய நாடுகளும் இந்தியாவும் கூட அவர்களைக் கைவிட்டுவிடுவார்கள். ஜேவிபியை எதிர்க்க நாட்டில் ஒரு செல்வாக்கான அரசியல் இயக்கம் இன்மையால்தான் இன்று அனைவரும் அவர்கள் கலாடியின் போய் நிற்க்கின்றார்கள். இதுதான் உண்மை-யதார்த்தம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றி அனுர எதிர்த் தரப்பினருக்கு தேவையாக இருந்தால் நாம் சொல்கின்ற இந்த மெகா கூட்டணி கலத்தின் கட்டாயமாகும். நமது இந்த கருத்தின் தேவையை அனேகமாக இவர்கள் காலம் கடந்து யோசிக்கவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. அத்துடன் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட ராஜபக்ஸ-சஜித் கூட்டணிக்கு நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது. அப்போது வருகின்ற கூட்டணி ஒரு சரணாகதியாகவே அரசியல் கலத்தில் பார்க்கப்படும். அப்போதும் நாட்டில் சக்கதியான ஒரு அரசியல் இயக்கமாக அனுர தரப்பு பலமாக இருக்கும்.

நாம் சொல்கின்ற இந்த மெகா கூட்டணி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடக்குமாக இருந்தால் அந்தக் மெகா கூட்டணி அனுராவுக்கு எதிரான ஒரு பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக இருக்கும். பொதுத் தேர்தல் ஒன்று முன்கூட்டி வருமாக இருந்தால் ஜனாதிபதி பிரதமர் (ஜனாதிபதி சஜித்-பிரதமர் நாமல்) பதவிகளை விட்டுக் கொடுத்து இவர்கள் பொது எதிரியான அனுராவுக்கு எதிராக நாம் இங்கு சொல்கின்ற இந்த மெகா கூட்டணியின் முக்கயத்துவத்தை புரிந்து கொள்ள முன்கூட்டி ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதே நேரம் ஜனாதிபத் தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தால் அது ஜேவிபிக்கு வாய்ப்பாக வந்து சஜித் மற்றும் ராஜபக்ஸாக்களின் அரசியலுக்கு சுனாமி போன்ற ஒரு அழிவை அது ஏற்படுத்தி விட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பொதுத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மையைக் கொடுக்காது. என்பிபி.க்கு அல்லது அனுர தரப்பு நூறு வரையிலான ஆசனங்களைப் போராடிப் பெற்றுக் கொள்ள இடமிருக்கின்றது. இன்னும் சில தெரிவுகளைச் செய்து எப்படியும் அவர்கள் தமக்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொள்ள முடியும். பொதுத் தேர்தலில் சஜித் அணி அறுபதுவரையிலான ஆசனங்களையும், மொட்டுத் தரப்பினர் 35 வரை. தமிழ் தரப்புக்கள் 16 வரையிலும் இதர தரப்பினர் 16 வரையிலான ஆசனங்களைப் பெறக் கூடும். நாம் சொல்கின்ற மெகா கூட்டணிக்கு சஜித்-ராபக்ஸாக்கள் வர முடியுமாக இருந்தால் ஏனைய சிறு கட்சிகளுடன் அவர்கள் 120 வரையிலான இடங்களை சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் என்பது எமது கருத்து.

இப்படியான மொக கூட்டணி சமைக்கின்ற போது நாம் முன்பு சொன்ன எமது சகா தரப்பினர் வெற்றி வாய்ப்பு பற்றி ஆரோக்கியமாக எமக்கு கருத்துச் சொல்ல முடியுமாக இருக்கும். அதுவரைக்கும் எமது கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டு வருவது சிரமமாகவே இருக்கும்.  நமது இந்தக் குறிப்பின் யதார்த்தம் தேர்தல் முடிவுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ஆளும் மொட்டுத் தரப்பினரை உள்வாங்கி ஒரு கூட்டணியை அமைத்து 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தமது வேட்பாளர் ரணிலை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்து வருக்கின்றது. அதே நேரம் பொதுத் தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தால் ரணிலுக்கு ஆதரவு கொடுக்கின்ற மொட்டுக் கட்சியினர் இந்தக் கூட்டணியில் நீடிப்பார்களா என்பது பெரும் சந்தேகம்.

மொட்டுக் கட்சியுடன் முரண்;பாட்டிலிருக்கின்ற நிமல் லன்சா தரப்பினர் சனிக்கிழமை கொழும்பு ஹைட் பார்க்கில் பிரமாண்டமான ஒரு கூட்டத்தை நடாத்த ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இதில் கடந்த காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருந்த முக்கிஸ்தர்கள் பலரும், நூற்றுக் கணக்கான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அன்று இந்த அணியில் இணைந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகின்றது. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்வதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் அந்தரங்கச் செயலாளராக இருந்து வந்த சுவிஸ்வர பண்டார செய்து கொண்டிருக்கின்றார். அவர்தான் இப்போது இந்த அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் கூட.

No politics with SLPP or its affiliate persons - SJB

கோட்டா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது சுவிஸ்வர அவரை ஜனாதிபதியாக கொண்டு வருவதில் பெரும் பங்காற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மொட்டுக் கட்சியை மீட்டெடுக்கின்ற முயற்சியில் இப்போது நாமல் ராஜபக்ஸ களத்தில் இறங்கி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதே நேரம் பிரசன்ன ரணதுங்ஹ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே, பிரமித்த தென்னகோன், போன்றவர்கள் தமது ஆதரவை பகிரங்கமாகவே ரணிலுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது மொட்டுக் கட்சியில் பிளவை கோடிட்டுக் காட்டுக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி ரணில் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கனிக்கின்றார்-மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடாத்தி வருகின்றார் என்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர.

நாம் குறிப்பிடுகின்ற இந்த உத்தேச மெகா கூட்டணிக்குப் புறம்பாக தற்போது ரணில் தரப்பினரும் ஒரு கூட்டணிக்கு தயாராகி வருகின்றார்கள். அவர்கள் சஜித் அணியுடன் கூட்டணிக்கு ஆர்வமாக இருந்தாலும் அதற்கு சஜித் தயாராக இல்லை. கடந்து பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றி பெற முடியாது போன வங்குரோத்துக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் நமக்கு என்ன இலாபம் என்று கோட்க்கின்றார்கள் அவர்கள்.

ரணில் ஜனாதிபதி கதிரையில் இருக்கின்ற வரைதான் அவரது ஆட்டம் தொடரும். அதற்கும் பின்னால் அவர் செல்லாக் காசு என்பது அவர்களது வாதமாக இருக்கின்றது. இது யதார்த்தமும் கூட. அதே போன்று மொட்டுக் கட்சியும் தேர்தல்களில் தமது அணியில் ரணில் தரப்பை இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இல்லை.

நன்றி: 25.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம்- நெதன்யாகு 

Next Story

சர்வதேச சாரணிய மா நாட்டில் ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி பங்கேற்பு!