APRIL 19 வருகிறது செம்படை!

-நஜீப்-

இலங்கை அரசியலில் தீர்க்கமான சக்தியாக 60 வருடங்கள் களத்தில் இருக்கின்ற ஜேவிபி இப்போது  தேசிய மக்கள் சக்தி என்ற பேரில் அரசியல் செய்து வருகின்றார்கள். அந்த செஞ்சட்டை அணியினர் இதுவரை கோ ஹோம் கோட்டா போராட்டத்தில் தனது பலத்தைக் காட்சிப்படுத்தவில்லை.

சம்பிரதாய சந்திப்புக்களையும் ஒன்று கூடல்களையும்தான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு ஆதங்கம் நமக்குள் இருந்தது. அது பற்றி முன்பும் நாம் இந்தப் பகுதியில் பேசி இருந்தோம்.

இப்போது அவர்கள் தெற்கு பேருவளையில் இருந்து ‘கோ ஹோம் கோட்டா’ ஊருக்கு  தனது செம்படையை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

தெற்கில் இருந்து காலி முகத்திடல் நோக்கி வருகின்ற இந்த ஆதரவுப் பேரணியில் அதன் தலைவர்களும் பெருந்தொகையான பொது மக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரை அரசியல் கலப்பு இல்லாத போராட்டம். இதனால் அரசியல் சாயத்தைப் பூசிக் கொள்ளுமோ என்ற ஒரு அச்சமும் வருகின்றது. மோதல்கள் முறுகல் இல்லாமல் நல்லபடியாக நடந்தால் எல்லோருக்கும் நல்லது.

நன்றி17.04.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதி கட்டடத்தில் மின்னொளி எதிர்ப்பு!

Next Story

நாளை  புதிய அமைச்சரவை பதவி! SLMC, EPDP, க்கும் இடம்!  ACMC?