அடுத்த தலைவர் யார்!

-நஜீப் பின் கபூர்-

நாட்டில் கொதிநிலை பொருளாதார நெருக்கடி மறுபக்கத்தில் அன்னியச் செலவாணிக்காக யாசகம் கோட்டு நிற்கும் நிலை. அன்றாட உணவுக்காக அல்லல்படுகின்ற குடிமக்கள். இதற்கிடையில் நாட்டில் நம்பத் தன்மையில்லாத ஒரு ஆட்சி. இந்தப் பின்னணிகளுக்கு மத்தியில் நாம் அடுத்து பதவிக்கு வருவது யார் என்று வேறு ஒரு கதையைச் சொல்லி மக்களைக் குழப்ப வருகின்றோமா என்றும் யோசிக்க இடமிருக்கின்றது.

ஆனால் பதவியில் இருக்கின்ற மொட்டுக் கட்சியும் அதிகாரத்தில் இருக்கின்ற ஐதேக. ஜனாதிபதி ரணிலும் அவர்கள் சார்ந்த இருப்பக்க நலன்களுக்காக நெருக்;கமாக இருந்தாலும் அவர்களிடையே இருப்பது ஒருவகையில் மண்ணுக்கும் சுட்ட மண்ணகும் உள்ள உறவு முறைதான்.

காட்டு வெள்ளத்தில் அள்ளுண்டு போகின்ற ராஜபக்ஸாக்கள் ரணில் என்ற துரும்பில் தொங்கித்தான் உயிர் பிழைத்தார்கள் என்பதும் இன்று அவர்கள் அந்த வெள்ளத்தில் தப்பிப் பிழைத்ததால்  மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசிக்க முடிந்தது.

அன்று ரணிலை அதிகாரக் கதிரையில் இருத்தித் தம்மைப் பாதுகாத்துக் கொண்டவர்கள் இப்போது மீண்டும் தாம் பறிகொடுத்த அரசியல் அதிகாரங்களை மீட்டுக் கொள்வது தொடர்பான ஒரு இழுபறியில் ஈடுபட்டு வருகின்றார்கள். எனவேதான் மீண்டும் மஹிந்தாவுக்கு பிரதமர் பதவி. பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதிகாரம் மிக்க அமைச்சுக்கள் என்று போராட்டங்கள் மொட்டுக் கட்சியில் நடந்து கொண்டிருக்கின்றது.

அதிகாரம் மிக்க பதவி யாரிடம் இருந்தாலும் அடுத்த கட்ட நகர்வு என்று வருகின்ற போது அரசின் நிலை சப்பானி என்றுதான் இருக்கின்றது. எனவே பெயரளவில் அதிகாரம் ரணிலிடம் இருந்தாலோ அல்லது ராஜபக்ஸாக்களிடம் இருந்தாலோ நாம் துவக்கத்தில் சொன்ன நெருக்கடிகளில் எந்த மாற்றங்களும் வரப்போவதில்லை.

இந்தியாவும் சீனாவும் தான்னிடம் பெற்ற கடன்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களிடம் மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான நச்சரிப்பை செய்யத் துவங்கி இருக்கின்றார்கள். இவற்றிற்குத் தீர்வு தெரியாத வரை ஐஎம்எப்பும் உலக வங்கியும் தமது உதவிகளை வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறைந்த பட்சம் ஏதாவது நாட்டு உடமைகளை அவர்களுக்குக் கொடுத்துத்தான் இந்தக் கடனில் இருந்த இலங்கை மீள முடியும் என்ற நிலை.

இந்த இக்கட்டான நிலையில் கூட மொட்டுக் கட்சியில் இருக்கின்றவர்கள் தமக்கு அதிகாரமிக்க பதவிகளைத் தந்தால்தான் வருகின்ற வரவு செலவுத் திட்டததுக்கு ஆதரவு தரமுடியும் என்று அச்சுருத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ரணிலோ அப்படி எல்லாம் அமைச்சுக்களைத் தன்னால் தரமுடியாது என்று பின்னடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. அப்படிக் கொடுத்தாலும் சர்ச்சைக்குறிய பலருக்கு அமைச்சுத் தர முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டடில் ஜனாதிபதி ரணில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த உறுதியான ரணிலில் நிலைப்பாடு ராஜபக்ஸாக்களின் ஒரே வார்த்தையில் தகர்ந்து விடும் என்பதும் நமக்குத் தெரியும். எனவே வரவு செலவுத் திட்டத்தை வைத்து மொட்டுக் கட்சியில் உள்ள எஸ்.பீ. போன்றவர்கள் நடத்துகின்ற பயமுறுத்தல்களுக்கு என்ன நடக்கின்றது என்று பொருத்துப் பார்ப்போம்.

எது எப்படிப் போனாலும் இந்த அரசுக்கு ஆயுள் கம்மி. அடுத்த கட்ட நகர்வு என்பதும் தெளிவில்லாத ஒன்றாகத்தான் இருக்கின்றது. அத்தோடு இதே நாடாளுமன்றத்தை வைத்து எதிரணியினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் அறவே கிடையாது என்பதும் எமது கருத்து.

எனவே விரும்பியோ விரும்பாமலோ தேர்தல் ஒன்றுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற நிலை. சர்வதேச சமூகமும் தாம் இலங்கைக்கு ஒத்துழைக்க வேண்டுமாக இருந்தால் நாட்டில் ஸ்தீரமான அரசு ஒன்று இருக்க வேண்டும் என கண்டிப்பாக வேண்டுகோள் விடுக்கின்ற நிலையும் வருகின்ற நாட்களில் வரும்.

ஆனால் மொட்டுக் கட்சியினர் கடைசி நிமிடம் வரை அதிகாரத்தில் இருந்து விட்டுப் போவதற்குத் தான் தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் ரணிலுக்கு அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றார்கள் ஏற்கெனவே அவர்கள் இதற்காக உத்தரவாதத்தையும் ஜனாதிபதி ரணிலிடம் இருந்து பெற்றும் இருக்கின்றார்கள்.

இதனால்தான் சில தினங்களுக்கு முன்னர் இடையில் அரசாங்கத்தை கலைக்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்று ரணில் பகிரங்கமாகச் சொல்லியும் இருந்தார். என்னதான் ரணில் உத்தரவாதங்கள் கொடுத்தாலும் சடுதியான ஒரு தேர்தலுக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது.

அப்படியான ஒரு தேர்தலை சந்திக்க நாட்டில் இருக்கின்ற எதிர்க் கட்சிகள் தயாராக இருக்கின்றனவா என்று இப்போது பார்ப்போம். கடந்த காலங்களில் நாட்டில் வீசிய ராஜபக்ஸ அலையை இன்று இங்கு இல்லை. அதற்காக சிலர் சொல்வது போல அவர்கள் சீரோவாகி விட்டார்கள் என்பதும் அதன் அர்த்தம் அல்ல.

நாம் கடந்த வாரம் சொன்னது போல அவர்கள் ரணிலின் ஐதேக.வின் வங்குரோத்து நிலைக்குப் போக மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. ஒரு பொதுத் தேர்தல் வருமாக இருந்தால் அதனை ஒரணியில் நின்று சந்திக்கின்ற புரிதல் எதிரணியில் இருக்கின்ற கட்சிகள் மத்தியில் இல்லை.

தேசிய அளவில் இருக்கின்ற பிரதான எதிர்க் கட்சிகள் என்று பார்க்கின்ற போது சஜித்தின் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் அணுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பனதான் மொட்டுக் கட்சியுடன் மோதக்கூடிய சக்திகள்.

ஒரு பொதுத் தேர்தல் என்று வருமாக இருந்தால் இந்த இரண்டு பெரும் சக்திகளும் ஒன்றாக இணைவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியும். சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தெற்கில் செயல்படுகின்ற அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தமது தன்னத்துக்காக அந்த அணியுடன் கூட்டணியாகக் களமிறங்குவார்கள்.

இதில் வழக்கமான முஸ்லிம் காட்சிகள் மலையகளும் கட்சிகள் இணைந்து கொள்ளும். மைத்;திரி தலைமையிலான கூட்டணி ஒன்றுடன் டலஸ் மற்றும் பழைய இடது சாரிகள் இணைந்து கொள்ளக் கூடும். அதே நேரம் இன்று அரசை விமர்சித்துக் கொண்டிருக்கும் விமல் தரப்பினர் புதிய நியாயங்களுடன் மீண்டும் ராஜபக்கஸ அணியுடன் கூட்டணி போட்டாலும் ஆச்சர்யப்படுவற்கு ஒன்றுமில்லை.

வடக்குக் கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் அந்தப் பிரதேசங்களின் அரசியல் ஆதிக்கத்துக்காகப் பொதுத் தேர்தலில் எப்போதும் போல போட்டிக்கு வரும். சந்திரிக்க அமையாரும் வருகினற தேர்தல்களில் சில காய்களை நகர்த்தி ஒரு விளையாட்டை நடாத்தக் கூடும்.

ஜனாதிபத் தேர்தல் என்று ஒன்று வருமாக இருந்தால் ராஜபக்ஸாக்களுக்கு எதிரான பிரதான போட்டிக்கு இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதே பொருத்தமாக இருக்கும். தற்போது எதிர்க் கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருத்தமான ஒரு வேட்பாளர் என்று நாம் அவரைக் கருதவில்லை.

அதற்காக அணுரகுமார திசாநாயக்கவை நாம் சிபார்சு செய்ய வருகின்றோம் என்றும் எவரும் தப்புக் கணக்கப் போட்டு விடக்கூட. தனிப்பட்ட ரீதியில் சஜித்தை விட அணுரகுமார பல படிகள் மேலாக இருந்தாலும் வருகின்ற ஜனாதிபத் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரைக் களமிறக்கி சுலபமாக இலக்கை அடையலாம் என்பதும் அதற்கான நல்ல தெரிவுகளும் இருக்கின்றன என்று நாம் கருதுகின்றோம்.

நாம் முன்சொன்ன பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை சஜித் தரப்பு பெற்று இதர கட்சிகளுடன் கூட்டணி போட்டு அரசொன்றை நிறுவும் போது அதற்கு வேண்டுமானால் சஜித் பிரதமருக்கான நல்ல தெரிவாகவும் இருக்கலாம். மக்கள் உணர்வுகளைப் பார்க்கின்ற போது மொட்டுக் கட்சி தனது பழைய செல்வாக்கை இழந்து நிற்க்கின்றது.

எதிரணி சார்பிலும் கவர்ச்சிய ஒரு போட்டியாளர் இல்லை. சிலருக்கு திறமை இருந்தாலும் அதற்கான கவர்ச்சி அவர்களுக்கு இல்லை. சிலருக்கு செல்வாக்கு இருந்தாலும் ஆளுமை இல்லாதிருக்கின்றது. அந்தவகையில் செல்வாக்கு மிக்க தனிமனிதன் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஸதான் இன்றும் நாட்டில் ஏதேவகையில் கவர்ச்சி மிக்க மனிதனாக இருக்கின்றார். அதற்காக அவருக்க பழைய செல்வாக்கு மக்கள் மத்தியில் இருக்கின்றது என்பதும் பொருள் அல்ல.

இப்போது புள்ளி விபர ரீதியில் சில கணக்குகளைப் பார்ப்போம். பொதுத் தேர்தல் ஒன்றில் பிரதான போட்டியாளராக ஆட்சியைப் பிடிக்கின்ற இடத்திற்கு வருவதாக இருந்தால் தற்போதய அரசியல் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒரு அணி ஒரு கிராம சேவகர் பிரிவில் மூன்நூறுக்கும் நாநூறுக்கும் இடைப்பட்ட வாக்குகளைப் பெறவேண்டும். இந்த நாட்டில் 14000 வரையிலான கிராம சேவர் பிரிவுகள் இருக்கின்றன. அப்போது அந்த எண்ணிக்கை 42 இலட்சம்  56 இலட்சம் அளவிலான வாக்குகளாக இருக்கும்.

வருகின்ற தேர்தலில் தற்போது பலயீனப்பட்டிருக்கின்ற ராஜபக்ஸாக்கள் எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றார்கள்? சஜித் செல்வாக்கு எந்தளவுக்கு அதிகரித்திருக்கின்றது.

கடந்த தேர்தலில் வெரும் மூன்று உறுப்பினர்களை மட்டுமே வென்றெடுத்த ஜேவிபி இந்தத் தேர்தலில் தனது செல்வாக்கை எந்தளவுக்கு அதிகரித்திருக்கின்றது என்பதனை ஆய்வு செய்து பார்த்தால் பிரதான கட்சிகள் ஒரு முக்கோணப் போட்டியை பொதுத் தேர்தலில் கொடுக்க வேண்டுமாக இருந்தால் குறைந்தது 42 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை அவதானிக்க முடியும்.

இலங்கை அரசியலை அவதானிக்கின்ற போது மொட்டு அணியிலிருந்து பிரிந்து போய் இருப்பார்கள் என்று ஊகிக்கப்படுக்கின்ற பெரும்பாலான தெற்கு வாக்காளர்கள் ஜேவிபியை ஆதரிக்க வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரம் நாட்டில் என்னதான் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதனால் குறிப்பான சஜித் அணியின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கின்றது.

சஜித் அணியில் இருக்கின்ற பலர் ஊழல் பேர்வழிகளாகவும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளாகவும் சிறுபான்மை சமூகத்தை விற்று பிழைப்பு அரசியல் செய்பவர்களாகவும் இருப்பதால் அந்த அணி புனிதமற்ற அணி என்று ஜேவிபி குற்றம் சட்டி அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் ஆளும் மொட்டு அணியில் இருந்து இன்று விலகி இருக்கின்ற மைத்திரி, டலஸ், பாரம்பரிய இடது சாரிகள் எந்தளவுக்கு ஒரு பொதுத் தேர்தலில் வாக்குகளைப் பொறுவார்கள் அவர்களது அமைப்பு ரீதியான பலம் என்ன என்பதனையும் பொருத்துத்தான் பார்க்க வேண்டும்.

கடந்த 27ம் திகதி கூட்டு தொழிற்சங்கங்களும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களும் ஒன்றிணைந்து கொழும்பு ஹைட் மைதானத்தில் ஒரு அரச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி இருந்தார்கள்.

அதன் பின்னணியில் ஜேவிபி இருந்தது என்று தெரிகின்றது. அதே போன்று ஏனைய எதிரணியினரும் இன்னும் பல அமைப்புக்களும் கடந்த இரண்டாம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி இருந்தார்கள்.

இதனை ஜேவிபி தவிர்த்து இருந்ததைப் பார்க்க முடிகின்றது. தம்முடன் ஒன்றாக இருந்து பிரிந்து சென்ற குமார் குனரத்தினத்தின் சோஸலிச முன்னணியினர் இதில் பங்கு கெண்டிருந்ததால் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதை ஜேவிபினர் தவிர்த்திருக்கின்றார்கள்.

நன்றி– 30.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உடதலவின்ன ஊடகவிலாளர் கூட்டணியின் இடைக்கால நிருவாக சபை அறிமுகம்

Next Story

உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் நோக்கங்கள்