கோட்டா என்னையும் பதவியிலிருந்து நீக்குவார்-அமைச்சர் விமலவீர

அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை தவறு எனவும் நேரடியாக பேசும் தானும் எதிர்காலத்தில் வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என விமலவீர திஸாநாயக்க (Wimalaweera Dissanayake) தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால், சில அரசியல் விடயங்களை காலம் கடந்து புரிந்துகொள்கிறார்.

கல்வி கற்றவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ஆரம்பத்தில் நினைத்தாலும் கல்வி கற்றவர்கள் என்பதால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி தற்போது கூறுகிறார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சமையல் எரிவாயு பிரச்சினை மற்றும் எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படாமை பிரச்சினைக்குரியது.

இது ஜனாதிபதி செய்யும் மிகப் பெரிய தவறு எனவும் விமல்வீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இணைய வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Previous Story

11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு  5 நட்சத்திரங்கள்- பொன்சேகா தகவல்

Next Story

18,000 (SL.RS 48481.2) கோடி ரூபா கடன்! - நிபந்தனை விதிக்குமாறு இந்தியாவிற்கு அழுத்தம்