நெருக்கடி: தப்புவதற்கு கோட்டாபய முடிவு!

இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடிடலெலான்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

மத்திய வங்கி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி, நிதி மற்றும் எரிசக்தி அமைச்சுகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கூட்டத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கியிடம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் சமர்ப்பித்துள்ள திட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தேவையான அளவுகளை விவரித்துள்ளது மற்றும் தடையின்றி விநியோகத்தை பராமரிக்க 88 இறக்குமதிகள் தேவைப்படும் என்று கூறியுள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், 150,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் தேவைப்படும் என்று பெற்றொலிய கூட்டுத்தாபன பரிந்துரை கூறுகிறது.

இந்தியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு விரைவில் வழங்கப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரிக்கு கூடுதலாக எரிபொருள் வாங்குவதற்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை.

எரிபொருளை முறையாக வழங்குவதை உறுதி செய்யும் வகையில் உரிய காலத்தில் நிதி கிடைக்க வழிவகை செய்வது குறித்து உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதேவேளை, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக நிதி வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Story

மைத்திரி 48 கட்சிகளுடன்?

Next Story

நானில்லாமல் நீயில்லை!