புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்!

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Protests over alleged leak of Grade 5 scholarship exam paper - Newswire

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்கப் பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.

 

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் | Controversial Fifth Grade Scholarship Exam

மீண்டும் பரீட்சை

எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் | Controversial Fifth Grade Scholarship Exam

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை நிறைவில் வினாத்தாள் கசிந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் பரீட்சையை நடத்தத் தயங்கப்போவதில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Previous Story

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்

Next Story

சமூக ஊடகங்கள்: பொலிஸார் கடும் எச்சரிக்கை