கருப்பை விவகாரத்தில் ஹக்கீம் அந்தர் பல்டி-சரணாகதி!

 

ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதிகள் வளர்கின்றார்கள் என்று அணுர நாடாளுமன்றத்தில் பேசி இருந்தான் அவன் ஒரு மிகப் பெரும் இனவாதி என்ற தோரணையில் நாகரீகமில்லாத வார்த்தைகளில் மு.கா. ஹக்கீம் பேசி இருந்தார்.

இதனைக் கடுமையாக எதிர்த்த அணுர தனது வார்த்தை புரிதலில் உள்ள தெளிவின்மையால் ஹக்கீம் அப்படிப் பேசி இருக்கலாம். ஆனால் அவருடன் எனக்கு எந்தக் கோபமும் இல்லை என்று கூறிய அணுர, தனது நிலைப்பாட்டை ஹக்கீம் மாற்றிக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை என்றும் எச்சரித்திருந்தார்.

அதன் பின்னர் அப்படியாக ஹக்கீம் எங்கும் பேசவில்லை. துணிச்சல் இருந்தால் அவர் தனது கூற்றை தொடர்ந்தும் மேடைகளில் பேசி இருக்கலாம்-பேச வேண்டும்.

பின்னர் சந்துரு என்பவருடன் நடந்த ஊடகச் சந்திப்பில் அணுர விளக்கத்தை நான் ஏற்பதாகக் குறிப்பிட்டு நானும் சற்று வேகமாகப் பேசி விட்டேன் என்று ஹக்கீம் விளக்கம் கொடுத்திருப்பதுடன் இப்போது அடக்கி வாசிக்கத் துவங்கி விட்டார்.

ஹிஸ்புல்லாவை முனாபீக்கு என்று சொல்கின்ற ஹக்கீமை அவரது கட்சிக்காரர்களே தலைவர் ஹக்கீம்தான் மிகப் பெரும் முனாபீக்கு என்று பகிரங்கமாக விமர்சிக்கின்றார்கள்.

Image result for Rauff hakeem cartoons

ஒட்டுமொத்தமாக அவர்கள் அரசியல் அதுதான். இதனால் அங்கு வேகமான சரிவு. எனவே சமூகம்தான் முனாபீக்கு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

மற்றுமொரு இடத்தில் பேசுகின்ற போது அணுரவை ஒரு இனவாதி என்று நான் சொல்ல மாட்டேன் என்றும் ஹக்கீம் அணுராவுக்கு சான்றிதழும் கொடுத்திருக்கின்றார். இதுதான் ஹக்கீம் அரசியல்.

எப்படி இருக்கின்றது ஹக்கீமின் அந்தர் பல்டி. முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள்தான் தாக்குதலை நடாத்தி இருக்கின்றார்கள்.

இதற்கு முஸ்லிம் பெற்றோர்களும் சமூகமும் உலமாக்களும் பெறுப்புக் கூற வேண்டும் என்று தாக்குதல் நடந்த முதல் வாரத்திலே நாமும் தினக்குரல் ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையில் (2019.04.28) அன்று சொல்லி இருந்தோம்.

Previous Story

இந்திய விரோத அமெரிக்க பெண் எம்.பி.யுடன் ராகுல் சந்திப்பால் சர்ச்சை

Next Story

கார்டியன் நியூஸ் 10 புதன் 11.09.2024