சஜித்தை மேடையில் வைத்துக் கொண்டு அவர் தோல்வி பற்றி பேசிய மனோ !

நாம் இந்த செய்தியைப் பதவிவேற்றம் செய்த பின்னர் இது வைரலாகி தனது நிலைப்பாட்டை மாற்றி மனோ கனேஷன் புதிய கதைகள் சொல்லக் கூடும். நாம் இங்கு தருகின்ற தகவல்களை மிகவும் அவதானமாகப் பாருங்கள்.

நாம் தருகின்ற தகவல்களில் சந்தேகம் இருப்பின் இன்று முல்லைத்தீவில் நடந்த சஜித் ஆதரவு பிரச்சாரக் கூட்டதில் பதிவுகள் யூடிபில் இப்போதும் இருக்கின்றது. அதனை நீக்காவிட்டால் அதில் இதனைப் பார்க்கலாம்.

அங்கு மனோ கணேசன் பேசும் போது வடக்குக் கிழக்கில் இருக்கின்ற எட்டு மாவட்டங்கள் மற்றும்

9.கண்டி

10.நுவரெலியா

11.கேகாலை

12.இரத்தினபுரி

13.களுத்துறை

14.பதுள்ளை

15. கம்பஹ

16.கொழும்பு. இந்தப் பதினாறு மாவட்டங்களில் நாம் முன்னணியில் இருக்கின்றோம்.

ஏனைய மாவட்டங்களில் நாம் அடுத்து வருகின்ற வாரங்களில் முன்னணிக்கு வந்து விடுவோம் என்று சில நிமிடங்களுக்கு முன்னர் முல்லையில் பேசி இருந்தார்.

அப்படியாக இருந்தால்

17.அனுராதபுரம்

18.பொலன்னறுவை

19.புத்தளம்

20.குருணாகல

21. காலி

22.மாத்தற

23.ஹம்பந்தோட்டை

24.மொணராகல

25.மாத்தளை என்பன அணுர வெற்றி என்றுதான் அவர் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார். இது முதலாவது விடயம்.

அடுத்தது இந்த நாட்டில் வடக்குக் கிழக்கில் இருப்பது ஐந்து தேர்தல் மாவட்டங்கள் மட்டுமேதான். மொத்தமாக நாட்டில் இருப்பது 22 தேர்தல் மாவட்டங்கள் மட்டும் என்பது மனோவுக்கு இன்னும் தெரியாது போலும்.

அடுத்து கம்பஹ களுத்துறை கொழும்பு மற்றும் மனோ குறிப்பிடுகின்ற ஏனைய மாவட்டங்களில் சஜித்தான் முன்னணியிலா என்று நீங்களே மனோவின் இந்த கதையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

நமது பார்வையில் மனோ கதை சஜித்தை மேடையில் வைத்துக் கொண்டு அவர் பின்னணியில்தான் இருக்கின்றார் என்று சுட்டிக் காட்டுவதாக அமைந்திருந்தது என்பது நமது விமர்சனமாக இருக்கின்றது.

Previous Story

ஜனாதிபதித் தேர்தல் 2024 ஊவா

Next Story

2024 ஜனாதிபதித் தேர்தல் கணிப்பு தென் மாகாணம் 3,4