இறைவன் ராஜபக்ஸாக்களை வேகமாகத் தண்டிக்கின்றான்!

இலங்கை வரலாற்றில் மிகப் பெரியதோர் பெரும்பான்மை வாக்குப் பலத்தில் அதிகாரத்துக்கு வந்தவர்தான் கோட்டாபே ராஜபக்ஸ ஆனால் அவர்கள் அதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் முற்றிலும் வன்முறையானதாகவும் இனவாதம் கொண்டதாகவும் அமைந்திருந்தன.

அந்த நாட்களில் இந்த நாட்டில் இருந்த சிறுபான்மை சமூகங்கள் மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்து கொண்டிருந்தனர். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அப்பட்டமான வன்முறை நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

இப்படி குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர்கள் அதிகாரத்தக்கு வந்த பின்னரும் தமது அடாவடித்தனங்களை கைவிடவில்லை. கொவிட்டில் மரணித்த இஸ்லாமியர்களின் உடல்களை தீயில் போட்டுக் கொழுத்தியதை ஒரு காலத்திலும் முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.

Sri Lanka's Rajapaksa dynasty is not as secure as it appears

அப்படி அதிகாரத்துக்கு வந்தவர் வெறும் இரண்டே வருடங்களில் அதிகாரத்தை கைவிட்டு ஓட வேண்டியும் வந்தது. இன்று அதே மொட்டுக் கட்சியினர் அவர்களே அதிகாரத்துக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கைகளினால் ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சி மிகப் பெரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது.

இந்தளவு வேகமாக இறைவன் ராஜபக்ஸாக்களை தண்டித்து ஒரு படிப்பினையை கொடுத்திருக்கின்றான் என்றுதான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Previous Story

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் 

Next Story

 யூனுஸ் அரசு இன்று பதவி ஏற்பு!