அதிர்ச்சி அடைந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

Scene with group of people, walking with flags to elections. Crowd of women and men at a demonstration. Concept for election campaign, voting theme vector background.

அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் வீடு வீடாகச் சென்று சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வுகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு

கடந்த சில வாரங்களில் அடுத்த தேர்தலில் பலரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கை மக்களால் அதிர்ச்சி அடைந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் | Sri Lankans In Confusion President Election

அப்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள், வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்பும் திறன் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே வேட்பாளரை தேர்வு செய்வோம் என 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் வேட்பாளர்கள்

சுமார் 20 லட்சம் இளைஞர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறமாட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

 

இலங்கை மக்களால் அதிர்ச்சி அடைந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் | Sri Lankans In Confusion President Election

பெருந்தொகையான மக்களின் குழப்பமான நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இம்முறை ஜனாதிபதி தேர்தல் மும்முனை களமான சூடு பிடித்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.

சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அணியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றுமொரு அணியாகவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றுமொரு அணியாகவும் தேர்தலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல்

Next Story

மஹிந்த ராஜபக்ஸ பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்-கஞ்சன