மு.கா ஊடாகவாவது நான் பாராளுமன்றம் போயாக வேண்டும்! -ஞானசாரர்-

வருகின்ற தேர்தலில் நான் இந்த முறை எப்படியாவது பாராளுமன்றம் போயாக வேண்டும் இப்படி அடம்பிடிக்கின்றார் ஞானசாரர் தேரர். பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. இந்த நாட்டில் இன்னமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. 2ம் பக்கம்

இவற்றை நான் நாடாளுமன்றம் போய்த்தான் அங்கு சொல்லியாக வேண்டும் வெளியிலிருந்து பேசினால் ஏதுவுமே நடக்கப் போவதில்லை என்று ஒரு ஊடகச் சந்திப்பில் அவர் கூறி இருக்கின்றார். தனக்கு மு.கா. ஊடாக நாடாளுமன்றம் போகக் கிடைத்தாலும் அந்த வாய்ப்பை நான் பாவிக்கத் தவற மாட்டேன் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

மேலும் அதுருலியத் தேரரை இவர் ஒரு பறயன் என்றும் அங்கு விமர்சித்திருந்தார். தான் குறிப்பிட்ட திக்வெல்ல ஷேக்கை நான் நீண்டகாலம் மீண்டும் சந்திக்கவில்லை. அவர் உயிருடன் இருக்கின்றாறோ இல்லையோ தனக்குத் தெரியாது. ஷேக்கிற்கு வயது 65 வரையில் இருக்கும் என்றும் அவர் மேலும் அந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

இந்த அடிப்படைவாதிகள் இன்று அணுராவுடன்தான் இருக்கின்றார்கள் என்றும் அவர் அங்கு குற்றம் சாட்டி இருந்தார். இவற்றை எல்லாம் பார்க்கின்ற போது ஞானசாரர் ஒரு நிகழ்ச்சி நிரலுடன்தான் வெளியே வந்திருப்பது உறுதியாகின்றது.

நன்றி கார்டியன் நியூஸ் 31.07.2024

Previous Story

ஹெஸ்பொலா தளபதி கொலை 

Next Story

இஸ்மாயில் ஹனியே படுகொலை:பின்னணியில் அமெரிக்கா