சாகர ரணிலை நிராகரிக்கிறார்.!

-நஜீப்-

மொட்டுக் கட்சிக்குள் ரணில் தரப்பு ராஜபக்ஸ தரப்பு என்றும் இன்னும் பல குழுக்களும் இருக்கின்றன. இது தவிர மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் இப்போது மொட்டுக் கட்சிக்குள் அடி தடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பிரசன்னவும் உதயங்க வீரத்தங்கவும் மோதிக் கொண்டார்கள். சில தினங்களுக்கு முன்னர் கண்டி மாவட்ட மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகேயும் ஹாரிஸ்பத்தவ-குனதிலக்க ராஜபக்ஸாவும் மோதிக் கொண்டார்கள். இப்போது முரண்பட்ட குழுக்கள் சந்திக்கின்ற இடமெல்லாம் மோதிக் கொண்டு பொலிஸ் வைத்தியசாலை நீதி மன்றம் என்று ஓடித்திரிகின்றார்கள்.

இதிலுள்ள மற்றுமொரு வேடிக்கை என்ன வென்றால் மொட்டுக் கட்சி செயலாளர் சாகர காரியவசம் தான் நான்கு மாதங்களாக ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்ற ஆளும் தரப்புக் கூட்டங்களில் பங்குபற்றுவதில்லை என்று பகிரங்கமாக ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

இதிலிருந்து  அரசாங்க என்ன இலச்சனத்தில் செயலாற்றிக் கொண்டு போகின்றது என்று அவதானிக்க முடிகின்றது. அத்துடன் தனக்குத் தெரியாது கட்சியில் சில காரியங்கள் நடப்பதையும் சகர ஏற்றுக் கொள்கின்றார்.

நன்றி: 09.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சஜிதுக்கும் கனவு காணலாம்.!

Next Story

ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்?