நிரம்பி வழியும் அந்நியர்!

சஜித் அணிக்குள் கசப்பு!

-நஜீப்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜித் அணிப் பேராசிரியர் அர்ஷத டி சில்வா ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தி இருந்தார். அப்போது மனிதன் கடும் கோபத்தில் பேசி அங்கு கத்தி குதறி இருக்கின்றார். இதற்குக் காரணம் என்ன என்று பார்த்ததால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவிடம் அபிவிருத்திக்கு நிதியைப் பெற்றுக் கொண்டது தொடர்பாக ஒருவர் அங்கு கேள்வி கேட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி ரணிலிடம் இப்படி பணம் பெற்றுக் கொண்டவர்கள் டசன் கணக்கில் சஜித் அணியில் இருக்கின்றார்கள். இது கட்சி வட்டாரத்தில் கடும் விமர்சனத்தக்கு இலக்காகி இருந்தது. இன்னும் பல சஜித் உறுப்பினர்களுக்கு கல்லுக் கடைக்கு அனுமதிப்பத்திரமும் பெற்று இருப்பதாகவும் கதை.

ஆனால் இந்த லைசன்களைப் பெற்றவர்கள் வேறு ஆள் வைத்துப் பெற்றுக் கொண்டதால் தேடுவதில் சிக்கல் என்றும் சொல்லப்படுகின்றது. கட்சியின் எழுத்து வேலை பார்ப்பவரும் ஆள் போட்டு லைசன் வாங்கி இருக்கின்றாராம். இதனால் இவர்கள் மீது சஜித் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகின்றாராம்.

நிரம்பி வழியும் அந்நியர்!

நமது நாடாளுமன்றத்துக்கு தாராள மனசு. வருவோர் போவோர் எல்லோரைம் வரறே;பது மட்டுமல்ல தங்க இடம் கொடுத்து அமைச்சு-பட்டம் பதவிகள் வாகனம் பாதுகாப்பு படை காரியாலயம் எல்லாம் கொடுத்துக் கௌரவிப்பிதில் வையகத்தில் நமக்குத் தனிய இடம்.

அமெரிக்கா பிரசையை அழைத்து அவருக்கு நாட்டைக் கூட கையில் கொடுத்த தேசம் இது. உள்நாட்டு அரசியலில் அச்சானியாகவும் கட்சி சமைத்தும் மற்றுமொரு ராஜா வலம் வந்து கொண்டிருக்கின்றார். கீதா, டயனா என்றும் இப்படிப் பலர் நமது நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கின்றார்கள்.

இந்த நிலையில் ஓமல்பே சோபித்த தேரர் இது போன்று இன்னும் டசன் கணக்கானவர்கள் நமது நாடாளுமன்த்தில் சட்ட விரோதமாக பதவி வகித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கண்டு பிடித்திருக்கின்றார்.

இப்படி கண்டு பிடித்திருக்கின்ற தேரர் அவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏன் இன்னும் உரிய இடங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கேட்கத் தோன்றுகின்றது.

நன்றி: 19.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாடசாலை உதைப்பந்தாட்டம்: அகில இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றது கலகெதர ஜப்பார் .

Next Story

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் அதிபர் நிலை என்ன? தேடுதல் தீவிரம் Helicopter carrying Iran’s president suffers a ‘hard landing,’ state TV says, and rescue is underway