முன்னாள் பிரதமர் தி.மு.சேகுவேரா!

-நஜீப்-

Political News | Sundayobserver.lk - Sri Lanka

இது ஒரு வரலாற்று நிகழ்வு: 1971 ஏப்ரல் கிளர்ச்சிக்கு சேகுவேரா கிளர்ச்சி என்றும் ஒரு பெயர். தவறான தகவல் பரிமாற்றல் காரணமாக ஒரு நாள் முன்கூட்டி வெல்லவாய பொலிஸ் நிலையத்தை இவர்கள் தாக்கி விட்டார்கள். அதனால் ஸ்ரீ மா அரசு விளித்துக் கொண்டது.

Remembering and reflecting on the April 1971 insurrection | Daily FT

ஸ்ரீமாவுடன் நெருக்கமான உறவில் இருந்தவர் கம்பளை தி.மு.ஜயரத்தன. மஹிந்த காலத்தில் அவர் பிரதமர். வெல்லவாய பொலிசை தாக்கச் சென்றவர்கள் இந்த தி.மு.க்கு செந்தமான போஜோ 404 காரில்தான் ஆயுதங்களுடன் கம்பளையிலிருந்து அங்கு போய் இருக்கின்றார்கள்.

First reign of terror by the JVP – The Island

தாக்குதலுக்கு பின்னர் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. காருக்குச் செந்தக்காரரான தி.மு.வை உடன் கைது செய்யுமாறு மேலித்தில் கட்டளை.! அப்படியானால்  தி.மு.சேகுவேராகாரனா? தி.மு. ஜெயரத்தன பிறப்பகம் கம்பளை-தொலுவ. கண்டியில் இருந்து தொலுவ செல்லும் பாதை பேராதன பல்கலைக்கழகம் ஊடாக அமைந்துள்ளது.

Marxist head and the Cultural heart | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

அதனால் தி.மு.வுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலர் நெருக்கமான நண்பர்கள். சிலருக்கு விடுதி கிடைக்காததால் சிலரை அவர் தனது வீட்டில் தங்க வைத்துக் கொண்டார். அவர்கள்தான் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்குதலுக்குப் போய் இருக்கின்றார்கள். ஸ்ரீ மா நெருக்கம் காரணமாக அன்று தி.மு.தலை தப்பியது.!

நன்றி: 28.04.2024 ஞாயிறு தினக்குரல்

சஜித் சீகிரியாவில் பதவியேற்பு!

Explore Sigiriya | The Lion Rock | Impressive Design

சீகிரியா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மன்னன் காசியப்பன். தனது ஜேவிபி. அரசியல் செயல்பாடுகள் காரணமாக இதுவரை சீகிரியாவுக்குக் கூட போய்வர முடியவில்லை என்று ஒப்பாறி வைத்திருந்தார் விமல் வீரவன்ச. வரலாற்று முக்கியத்துவம் காரணமாக இன்று சீகிரிய உல்லாசப் பயணிகளுக்கு ஒரு கேந்திர முக்கியத்துவும் வாய்ந்த இடம்.

இதில் வரும் புதிய தகவல், வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் வெற்றி பெற்றதும். அவர் அங்குதான் பதவி ஏற்க இருக்கின்றார். அதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கதைகள். இது பற்றி நமக்கு எந்த முரண்பாடுகளும் கிடையாது.

யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் பதவி ஏற்க முடியும். தலதா மாளிகையில் போய் பதவியேற்றவர்கள் இருக்கின்றார்கள். புனித பூமி அனுராதபுரத்தில் கூட பதவியேற்றவர்கள் இருக்கின்றாhகள்.

கடவுள் சன்னிதானத்தில் வாக்குறுதி-சத்தியம் கொடுப்போர் அனைவும் புனிதர்களா? மதத்தின் பேரால்தானே இங்கு போதை வர்த்தகமே கொடிகட்டிப் பறக்கின்றது. அப்போ…!

நன்றி: 28.04.2024 ஞாயிறு தினக்குரல்

ரணில்-பசில் 4 வது சுற்றில்!

Ranil & Basil clash over IMF report - UTV News English

அமெரிக்காவில் இருந்து தேர்தல் வரைபடங்களுடன் நாட்டுக்கு வந்து இறங்கிய பசில் ராஜபக்ஸ சில தினங்களுக்கு முன்னர் நான்காவது சுற்றாகவும் ஜனாதிபதி ரணிலைச் சந்தித்திருக்கின்றார். பசில் இந்த சுற்றில் ஜனாதிபதியுடன் சுமுகமான ஒரு சந்திப்பை நடாத்தி இருக்கின்றார்.

அப்போது தான் தேர்தலுக்கு வருவதை ரணில் பசிலுக்கு உறுதிப்படுத்தி இருக்கின்றார்.? அதன் பின்னர் மொட்டு மற்றும் ஐதேக. முக்கியஸ்தர்கள் சிலர் ரணில்-பசில் சோடிகளைச் சந்தித்திருக்கின்றார்கள். அப்போது ரணில் தேர்தல் தொடர்பாக நாம் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை.

மக்களுக்கு இப்போது கொடுக்கின்ற சலுகைகளை உரிய முறையில் பகிர்ந்து அளித்தால் தேர்தலுக்கு அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்பது ஜனாதிபதி ரணில் நிலைப்பாடாக இருக்கின்றது.

அத்துடன் அமைச்சரவையில் இருந்து விஜேதாசாவை தூக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணிலிடத்தில் பலர் கேட்டுக் கொண்டாலும் ரணில் அதனைப் பெரிதாக காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை!

நன்றி: 28.04.2024 ஞாயிறு தினக்குரல்

ஜனாதிபதி வேட்பாளர் தேசப்பிரிய!

Mahinda Deshapriya applies for Election Commission - NewsWire

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு நண்பர்கள் பகைவர்கள் என்று எதுவுமே கிடையாது என்பது பழைய கதை. நாம் அறிந்தது பார்த்ததுதான் இவை. ஆனால் இது சற்று மாற்றமான ஒரு கதை. முன்னாள் ஜனரஞ்சகமான அரச சேவை அதிகாரியாக இருந்த ஒருவர் தான் வருகின்ற மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என்ற ஒரு அதிரடி செய்தி.

எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் தேர்தல் தொடர்பான கடமைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரைத்தான் இந்த முறை மொட்டுக கட்சி தனது வேட்பாளராக கொண்டுவர இருக்கின்றது என்று தகவல். அந்தக் கதைகளுக்கு என்ன ஆதாரங்கள் என்று நம்மிடம் கோட்டால் அதற்கு பதில் இல்லை.

என்றாலும் இந்த அடையளத்துடன் பார்க்கப்படுகினற மனிதன் வேறு யாரும் அல்ல. முன்னாள் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவராக இருந்த மஹிந்த தேசப்பரியதான் இந்த ஆள் என்று ஒரு செல்வாக்கான சமூக ஊடகக்காரர் நமக்க இந்த தகவலை கசியவிட்டிருக்கின்றார்.

நன்றி: 28.04.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மே தினத்தோடு துவங்கும் தேர்தல் பரப்புரை

Next Story

10 பந்துகளில் 50 ரன்!