830மீ. உயர புர்ஜ் கலீபா உச்சியில்  ஏறி நின்ற பெண். பின்னாடி பறந்த விமானம்: ஏன்!

830 மீட்டர் உயரம் (2723 அடி)

புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சியில் பெண் ஒருவர் ஏறி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏங்க இதை போன வருஷமே படிச்ச மாதிரி இருக்கே.. இது பழைய நியூஸ் என்று நினைக்கிறீர்களா? அட இல்லை.. அந்த பெண் மீண்டும் அதே இடத்தில் ஏறி நின்று இருக்கிறார். இந்த முறை வேறு காரணத்திற்காக!

முதலில் பிளாஷ் பிளாக்.. கடந்த வருடம் துபாயில் இருக்கும் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சியில் நிக்கோல் ஸ்மித் லூட்விக் என்ற பெண் ஏறி நின்று அதை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். சாகசம் நிகழ்த்துவதற்காகவோ, செய்தியில் வர வேண்டும் என்பதற்காகவோ இவர் இந்த செயலை செய்யவில்லை. யுனைட்டட் அரபு எமிரேட்ஸின் எமிரேட்ஸ் ஏர்லைன் விமான விளம்பரத்திற்காக இவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

2009ல் இருந்து உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையை புர்ஜ் கலீபா கட்டிடம்தான் கொண்டு இருக்கிறது. இதன் உச்சியில் இருக்கும் கூம்பையும் சேர்த்து இதன் மொத்த உயரம் 830 மீட்டர் ஆகும்.

புர்ஜ் கலீபா

“நாங்கள் உயரே பறக்கிறோம்” என்ற மெசேஜை அந்த பெண் சொல்லும் விதத்தில் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த யுனைட்டட் கிங்டம் ஐக்கிய அரபு அமீரகம் மீதான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்போது யுனைட்டட் அரபு எமிரேட்ஸின் எமிரேட்ஸ் ஏர்லைன் விமானம் மூலம் இந்த விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது உலகம் முழுக்க இந்த விளம்பரம் பெரிய வரவேற்பை பெற்றது.

புர்ஜ் கலீபா பெண்

இந்த நிலையில் தற்போது மீண்டும் கையில் பதாகைகளுடன் நிக்கோல் ஸ்மித் லூட்விக் புர்ஜ் கலீபா மீது ஏறி நின்று உள்ளார். துபாயில் துபாய் எக்ஸ்போ 2021 கண்காட்சி நடந்து வருகிறது.

மார்ச் இறுதிவரை நடக்கும் இந்த கண்காட்சிக்கு உலக நாட்டு தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கண்காட்சிக்கு விளம்பரம் ஏற்படுத்தும் வகையில் யுனைட்டட் அரபு எமிரேட்ஸின் எமிரேட்ஸ் ஏர்லைன் விமானம் மூலம் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

“நான் இன்னும் இங்கேயேதான் இருக்கிறேன்” என்று அந்த பெண் சொல்வது போன்ற பதாகைகளுடன் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போ 2021

830 மீட்டர் உயரத்தில் உரிய பாதுகாப்பு வசதியுடன் நிக்கோல் ஸ்மித் லூட்விக் நிற்க வைக்கப்பட்டுள்ளார். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அவருக்கு பின்பாக Emirates A380 விமானம் பறக்கிறது.

துபாய் எக்ஸ்போ விளம்பரத்தை சுமந்து அந்த விமானம் அவருக்கு பின்பாக பறக்கிறது. இந்த விமானத்தை பார்த்து அத்தனை அடி உயரத்தில் அந்த பெண் கை அசைக்கும் காட்சிகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோல் ஸ்மித் லூட்விக் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஆவார்.

830 மீட்டர் உயரம் (2723 அடி)

முறையாக பயிற்சி எடுத்து தற்போது ஸ்கை டைவிங் பயிற்சியாளராக இருக்கும் இவரை பல கட்ட சோதனைகளுக்கு பின் இந்த விளம்பரத்திற்காக தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர்.

மிகுந்த பாதுகாப்போடு, முறையான ஏற்பாடுகளை மேற்கொண்டு இந்த வீடியோவை தயாரித்து உள்ளனர். இந்த வீடியோ விளம்பரத்திற்கு பின் இணைய உலகில் புதிய பிரபலமாக, மாடலாக நிக்கோல் ஸ்மித் லூட்விக் உருவெடுத்துள்ளார்.

Emirates A380 விமானம்

இந்த விளம்பரத்தை எடுப்பதற்காக Emirates A380 விமானம் முழுக்க துபாய் எக்ஸ்போ விளம்பரத்திற்கு பெயிண்ட் அடித்துள்ளனர். அதேபோல் அந்த விமானத்தை மிக மிக மெதுவாக.. அதாவது 140 நாட்ஸ் வேகத்தில் பறக்க வைத்துள்ளனர்.

பொதுவாக இந்த விமானம் சராசரியாக 480 நாட்ஸ் வேகத்தில் பறக்கும். அந்த விமானமே 140 நாட்ஸ் வேகத்தில் பறந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் சரியாக 830 மீட்டர் உயரத்தில் புர்ஜ் கலீபா உயரத்திற்கே இந்த Emirates A380 விமானம் பறந்துள்ளது.

விமானம் பறந்தது

உயரம் என்றால் கொஞ்சமும் அச்சப்படாத அளவிற்கு பல முறை, பல நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து குதித்து சாகசங்களை இவர் செய்து இருக்கிறார். அந்த பெண்ணை அவ்வளவு உயரத்தில் முறையாக பாதுகாப்பாக கட்டி நிற்க வைத்துள்ளனர்.

அவரும் உயரம் என்றால் பயம் இல்லாதவர் என்பதால் முகம் முழுக்க சிரிப்போடு கையில் கார்ட் போர்ட் வைத்து விளம்பரம் செய்துள்ளார். இவருக்கு பின்னே பறந்த விமானத்திலும் அவரின் முகம் பிராண்ட் அம்பாசிடராக இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

பெட்ரோல் வாங்க இலங்கைக்கு இந்தியா 500 மி.டொலர் கடன்

Next Story

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை: தேவி