4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.-இஸ்ரேல்

மனிதர்களுக்கு 4 முறை கொரோனா டோஸ்கள் போட்டும் கூட ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி வரவில்லை என்று இஸ்ரேல் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது முதல் கட்ட ஆய்வு முடிவுகள் ஆகும்.

உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக பல நாடுகளில் மூன்றாம் அலை பரவல் ஏற்பட்டுள்ளது.  இந்தியாவிலும் கூட ஓமிக்ரான் பரவல் 3ம் அலையை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் தினசரி ஓமிக்ரான் கேஸ்கள் 2.50 லட்சம் என்ற அளவை தாண்டி உள்ளது.

ஓமிக்ரான்

இந்த நிலையில் உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவலை எப்படி தடுப்பது என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் உடல்நலம் குறைந்த 60+ வயது கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேலில் மனிதர்களுக்கு 4 முறை கொரோனா டோஸ்கள் போட்டு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

பூஸ்டர்

அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் Sheba Medical Centre மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் மொத்தம் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டள்ளது. முதலில் மாடர்னா வேக்சின் போடப்பட்டுள்ளது. அதன்பின் கடைசி இரண்டு டோஸ் பைசர் வேக்சின் போடப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பூஸ்டர்

இதில் 4வது டோஸ் போட்டபின் 150 பேரின் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடிகள் மிக அதிக அளவில் உடலில் உயர்ந்து உள்ளது. மூன்றாவது டோஸை விட நான்காவது டோஸில் அதிக ஆண்டிபாடிகள் இருந்துள்ளது. ஆனால் 4 டோஸ்கள் போடப்பட்டு பின்பும் கூட இவர்களுக்கு ஓமிக்ரான் பரவலை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி கிடைக்கவில்லை.

பூஸ்டர் இஸ்ரேல்

அதாவது ஓமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ளுங்கள் ஆண்டிபாடிகள் இவர்களுக்கு உருவாகவில்லை. 4 டோஸ் வேக்சின் போடாதவர்களுக்கும் 4 டோஸ் போட்டவர்களுக்கு இடையில் ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டு குழுவிற்கும் ஓமிக்ரான் எதிர்ப்பு சக்தி இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உயர்ந்து உள்ளதே தவிர ஓமிக்ரானை எதிர்கொள்ளும் திறன் இல்லை என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் இஸ்ரேல்

இதனால் ஓமிக்ரான் பரவலுக்கு எதிராக பூஸ்டர்கள் எதிர்ப்பு சக்தி கொடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பல நாடுகள் பூஸ்டர் கொடுக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில் இந்த முடிவுகள் வெளியே வந்துள்ளது. ஓமிக்ரான் கொரோனாவில் 32 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓமிக்ரான் மிக எளிதாக வேக்சினில் இருந்து தப்பித்துக்கொள்வதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

கண்டியில் இளம் பெண்கள் கைது! 

Next Story

ஜனாதிபதியை புறக்கணித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!