ரணில் இரு தோணியில்!

-நஜீப்-

ஜனாதிபதி ரணில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக வருவதற்கு தன்னலான அனைத்து முயற்ச்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றார். ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சியும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியும் அவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுப்பதற்குத் தயராக இல்லை என்று தெரிகின்றது.

ஆனால் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த ரணிலும் சஜித்தும் இணைந்தால் மட்டுமே அணுராவுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியைக் கொடுக்க முடியும். இதில் யார் ஜனாதிபதி யார் பிரதமர் என்று பின்னர் யோசிக்கலாம்.

ஆனால் இந்த இரு தரப்பினரும் முதலில் ஓராணியில் இணைய வேண்டும் என்பதுதான் ராஜித ரணிலுக்கும் சஜித்துக்கும் வழங்குகின்ற ஆலோசனை. அதே நேரம் ரணிலுக்கு இந்த வாய்ப்பை சஜித் கொடுக்க வாய்ப்புக்கள் இல்லை.

அதே போன்ற மொட்டுக் கட்சியிலும் இவர் தன்னை பொது வேட்பாளராக முன்னிருத்தி களத்தில் இறங்குவதற்கு ஒரு முயற்சியை செய்து கொண்டிருக்கின்றார். ஆனால் இதுவும் எந்தளவு சாத்தியம் என்று தெரியாது. முன்கூட்டி பொதுத் தேர்தல் தந்தால் இது பற்றி யோசிக்கலாம் என்பது ராஜாகக்ள் நிலைப்பாடாக இருக்கின்றது.

நன்றி: 19.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 கெஹெல்லியவுக்கு மஹிந்த டீல்!

Next Story

பாடசாலை உதைப்பந்தாட்டம்: அகில இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றது கலகெதர ஜப்பார் .