இஸ்ரேலை ஆதரிக்கின்ற அரபு நாடுகள்!

இஸ்ரேலை ஆதரிக்கின்ற அரபு நாடுகள்!

இஸ்ரேலுக்கு எதிராக நாம் தாக்குதல்களை நடாத்துகின்ற போது அதற்கு எதிராக நீங்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று ஈரான் சில அரபு நாடுகளை முன் கூட்டியே கேட்டுக் கொண்டது.

ஆனால் அந்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்து விட்டதாகத்தான் தெரிகின்றது. தமது ஆகாய வெளியை இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று எகிப்து நேரடியாக ஈரனிடம் கூறி இருக்கின்றது.

அந்தவகையில் பார்க்கின்ற போது அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Latest Tamil News
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்தியக்கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது

ஹமாஸுக்கு ஆதரவு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

படுகொலை


இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

தாக்குதல் நடத்த உத்தரவு


எனவே, இஸ்மாயில் ஹனியே கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெளியேறுங்கள்


இந்தப் போர் பதற்றம் காரணமாக, லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை, உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

போர் பதற்றம்

இந்த நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Previous Story

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்!

Next Story

எதிர்பார்த்த படி ஜனாதிபதித் தேர்தலில் மு.கா.சஜித்துக்கு ஆதரவு