புதுக் கதை கூறும் வஜிர!

-நஜீப்-

No reorganisation of UNP needed - Vajira Abeywardana | Sunday Observer

நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்று முன்பு சொல்லி இருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இப்போது புதுக்கதைகள் சொல்ல துவங்கி இருக்கின்றார். அதன்படி வருகின்ற ஜனாதிபத் தேர்தலில் ஐதேக. சார்பில் ரணில் போட்டியிடமாட்டார்.

தற்போது இருக்கின்ற மூன்று விருப்பு வாக்கு முறையால் நாட்டில் மோசமான அரசியல் கலாச்சாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் இன ரீதியாகவும் குல ரீதியாகவும் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சிக்குள்ளே மோதல்களும் வெட்டுக் கொத்துக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

Ranil and the UNP are heading towards an unprecedented political fallout. - CounterPoint

ஐயா இந்த விருப்பு வாக்கு முறையையும் அதற்கான அரசியல் யாப்பையும் உங்களது தலைவர் ஜே.ஆர். தானே இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்தார். இதனால்தான் நாட்டில் நாசம் நடந்து கொண்டிருக்கின்றது என்று நீங்கள் சொல்வது தார்மீக ரீதியில் என்ன நியாயம் என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது.

அத்துடன் சிங்கள தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் சூழ்நிலை ஒன்று உருவாகின்றது என்றும் ஊடகச் சந்திப்பில் வஜிர சுட்டிக் காட்டி இருக்கின்றார். புரிகின்றதா  புதுக் கதை?

நன்றி: 03.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

2024 அதிரடி பொதுத் தேர்தல்!

Next Story

நள்ளிரவில் பரவிய தீ..43 பேர் பலி,