தனித்துவ அரசியல்!

-நஜீப்-

சமூகத்துக்கு தனித்துவ அரசியல் இயக்கம் என்ற கோஷசம் இன்று சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் செல்லாக்காசு என்ற நிலைக்கு வந்து விட்டாகவே தோன்றுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தனித்துவ அரசியல் தலைமைகள் சமூகத்தின் பெயரைச் சொல்லி வாங்கிய வாக்குகளை வைத்து தன்னல அரசியல் செய்து அப்பட்டமாக மூக்குடை பட்டு நிற்பதாகும்.

அத்துடன் தெருக்கள் தோரும் கடைகள் இருப்பதைப் போன்று தன்னல வியாபாரத்துக்காக தலைவர்கள் கட்சிகளை டசன் கணக்கில் துவங்கி அரசியல் பிழைப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் சிறுபான்மை சமூகத்தில் எண்ணற்ற அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக.

தேர்தல் காலம் என்பதால் இப்போது தலைமைகள் கட்சிக் கிளைகளை தெருக்கள்-வட்டாரங்கள் தோரும் இந்த நாட்களில் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் காட்சிகளை இப்போது பரவலாக கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

மலையகத்தில் சௌமியமூர்த்தியுடனும் கிழக்கில் அஸ்ரஃபுடனும் இந்த தனித்துவக் அரசியல் மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் சமூகம் புதிதாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

நன்றி: 18.02.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

சர்ஃபராஸ் கான்: ஜடேஜா மன்னிப்புக் கோரும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றது எப்படி?

Next Story

திரிசங்கு நிலையில் தேர்தல்!