டாக்டர் சாபி வழக்கு தரும் பாடம்!

நஜீப்

நன்றி 10.11.2024 ஞாயிறு தினக்குரல்

மகப்பேற்று வைத்தியர் சாபி தனக்கு எதிரான அனைத்து வழக்குகளிலும் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலையான விடயம் இந்த நாட்டில் வாழ்கின்ற  அனைத்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கிடைத்த ஒரு பெரு வெற்றியாகத்தான் இப்போது பார்க்கப்படுகின்றது-பேசப்படுகின்றது.

இந்த நாட்டில் நீதித்துறை சில சந்தர்ப்பங்களில் தூங்கி வழிகின்றது. சில சந்தர்ப்பங்களில் விளித்துக் கொள்கின்றது.  எனவே நீதித்துறை பற்றி மேலும் வார்த்தைகளை சொல்லி நாம் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

அதே நேரம் தனக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் ஒரு வெயிஸ் கட் தருமாறு ஜனாதிபதி ரணில் தரப்பில் இவரைக் கோட்ட ஒரு கதையும் அதற்கு முஸ்லிம்கள் தரப்பில் தரகர் வேலை பார்த்த ஒரு நாடோடி பற்றிய தகவலும் நம்மிடம் இருக்கின்றது.

ஆனால் அந்த வேலையை செய்ய டாக்டர் சாபி மறுத்துவிட்டார். அடுத்து இன்றும் ராஜபக்ஸாக்கள் குறிப்பாக கோத்தா அல்லது ரணில் அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்று ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் இதே நீதித்துறையின் செயல்பாடுகள் எப்படியாக இருந்து இருக்கும் என்பதனை சமூகம் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Previous Story

கட்டவிழ்ந்த அடம்பன் கொடி!

Next Story

சஜித்-ஹக்கீம் கூட்டணி முறிவு!