சீருடை-பாடப் புத்தகங்கள்:  அமைச்சின் அறிவிப்பு

புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சீருடை விநியோகம்

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் செய்யும் பணி என்பன எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Education Ministry S New Announcement

குறித்த பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் 2024ஆம்  கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் நாளையதினம்(19) ஆரம்பிக்கப்படவுள்ளன.

2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன்(16) நிறைவடைந்த நிலையில்,  நாளை முதல் புதிய கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர்   அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

திரிசங்கு நிலையில் தேர்தல்!

Next Story

சஜித் ஐதேக.வுக்கு!