சர்சசைக்குரிய மல்வானை வீடு சென்ற விஜயதாச!

மல்வானையில் உள்ள உரிமையற்ற வீடு மற்றும் 15 ஏக்கர் காணியை பயனுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கு பயன்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான பிரேரணையை அமைச்சரவையில் முன்வைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.இன்று (21) பிற்பகல் வீடு அமைந்துள்ள இடத்தை அவதானிக்க வந்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“அழிவடைந்துள்ள வீடு இந்த நாட்டில் சர்ச்சைக்குரிய விடயம் என்றே கூற வேண்டும். இது தொடர்பாக 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது, ​​இந்தக் காணி தொடர்பான பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பெயர்களும் இந்த காணிக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்தன. எனவே அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு இந்த நிலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. இந்த வீட்டை சர்வதேச அளவில் நீதிபதிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக பயன்படுத்த நாங்கள் முன்மொழிந்தோம்.”

"Basil Rajapaksa gave 1,100 lakhs to build Malwana house!" -- Architect gives evidence

“சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் அது நடக்கவில்லை. தற்போது இந்த வழக்கின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இந்த 15 ஏக்கர் நிலம் நீதியமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டிடங்களை நாங்கள் பயன்படுத்தும் வகையில் மீட்டெடுக்கவுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்கள் கூட போராட்டத்தின் போது எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.” என்றார்.
Previous Story

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி !- அமைச்சர் ஹரின்

Next Story

பிரசன்ன சின்னப் பையன்.!