கோட்டா பாணியில் ஹசீனாவும் ஓட்டம்!எங்கே சென்றார்?

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டங்களில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசினாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே மோதல் வெடித்தது.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?

சமீபத்தில் மாணவர் தலைவர்கள் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை அறிவித்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்தது.

சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

Bangladesh PM Sheikh Hasina leaves Dhaka after Army gives 45 minutes ultimatum to resign amid protests - BusinessToday

போராட்டங்கள் மீண்டும் வெடித்தது எப்படி?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அவர் தற்போதைய ஒதுக்கீட்டு சீர்திருத்த முறையைக் குறிப்பிட்டு, அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பிட்டார். கடந்த காலக்கட்டத்தில் அவரது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திய கதை இது.

அவர் கூறுகையில்: “சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகள் (பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்கள்) ஒதுக்கீடு பெற வேண்டுமோ? அதுதான் எனது கேள்வி.” என்று பேசினார்

அவர் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், பல்வேறு வளாகங்களில் மாணவர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத் தொடங்கினர்.

காவல்துறை மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) படையுடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுத்தது. ஆளும் கட்சியின் மாணவர் பிரிவும் அவர்களின் தாக்குதலில் இணைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அடுத்த 72 மணி நேரத்தில், வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்தது. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் எரிக்கப்பட்டது. Oரு சிறைச்சாலை வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?
வங்கதேசப் போராட்டம்

ஷேக் ஹசினாவுக்கு இது மிகப்பெரிய சோதனை

பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இது மிகப்பெரிய சோதனை.

வங்க தேசத்தின் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணான ஹசினாவின் வலிமையை அசைத்து பார்த்தனர்.

பதினாறு ஆண்டுகளாக, பிரதமர் ஷேக் ஹசினா வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார்.

அவரின் ஆட்சியில் சர்வாதிகார தலைமை போக்கு இருந்தபோதிலும் தேசத்தில் நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களுக்கு அவரே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.

பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அவரின் சக்தியை மாணவர் சக்தி அசைத்துவிட்டது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை, கலவரம் மற்றும் குழப்பங்களுக்கு வழிவகுத்தன.

மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் ஆட்சி கவிழுமா?

ஷேக் ஹசினா நாட்டின் முதல் ஜனாதிபதியின் மகள். அவரது வாழ்க்கையில் பல சவால்கள் மற்றும் முயற்சிகளை எதிர்கொண்டவர். உறுதியாக அதே சமயம் அமைதியான சுபாவம் கொண்டவர்.

அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தது. 57 ராணுவ அதிகாரிகளின் உயிரைப் பறித்த துணை ராணுவ எல்லைப் படை எழுச்சி, உலகெங்கிலும் இருந்து கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய மூன்று சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தல்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் போராட்டங்கள் உட்பட பல ஆண்டுகளாக அவரது நிர்வாகம் பல சவால்களைச் சந்தித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த சவால்களை விட தற்போது அவர் தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடுமையான சவாலை எதிர் கொள்கிறார். ஏனெனில் மாணவர் போராட்டங்கள் தேசத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னால் ஒன்றிணைந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் அரசாங்க வேலைகளில் பெரும்பாலான ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

இதற்கு எதிரான போராட்டங்கள் தான் நாடு முழுவதும் வன்முறை மோதல்களை ஏற்படுத்தியது.

100க்கும் மேற்பட்டோர் – பெரும்பாலும் இளம் மாணவர்கள் – அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளின் கடுமையான பதிலடியால் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?
ஜூலை 21, 2024 அன்று டாக்காவில், அரசு வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மோதல்களின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட சேதமடைந்த வாகனங்களை ஒருவர் கடந்து செல்கிறார்.

‘இது பிரஷர் குக்கர் திடீரென வெடிப்பது போன்ற நிலை’

ஆசியாவில் சர்வாதிகாரம் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் முபாஷர் ஹசன், இது ஒரே இரவில் ஏற்பட்ட போராட்டம் அல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோவம் அதிகரித்து, “பிரஷர் குக்கர் திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது” இது என்று விவரித்துள்ளார்.

டாக்டர் ஹசன் பிபிசி பங்களாவிடம் கூறுகையில் : “நினைவில் கொள்ளுங்கள், பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் ரஷ்யாவிற்கும் கீழே இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி இங்கே பேசுகிறோம்.

“ஷேக் ஹசினா மற்றும் அவரது கட்சியினரின் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலாக்குவது, குடிமக்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படை வாக்குரிமை மறுப்பது மற்றும் அவரது ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மை ஆகியவை சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினரை கோபப்படுத்தியுள்ளன.”

“துரதிர்ஷ்டவசமாக, அவர் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமராக நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு குழுவுக்கு மட்டுமே தலைவராக இருந்தார்.”

கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளால் டாக்டர் ஹசன் வியப்படையவில்லை.

1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போது எதிர்ப்புகள் அதிகரித்தன, ஆளும் கட்சியினர், போராட்டக்காரர்களைத் தாக்கியபோது போராட்டம் வன்முறையாக மாறியது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை மீண்டும் நிறுவிய மற்றும் மாணவர் போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அட்டர்னி ஜெனரல், ஹசினா அரசாங்கம் பிரச்னையை முடிக்க விரும்புகிறது என்று சுட்டிக்காட்டி, அதையே வாதிட்டார்.

அரசு தாக்குப்பிடிக்குமா?

தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை அமைதிப்படுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பு போதுமானதாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மாணவர்கள் தற்போது போராட்டத்தில் கொல்லப்பட்ட தங்கள் தோழர்களுக்கு நீதி வேண்டும் என்கின்றனர். எனவே, அதாவது பல போலீஸ் அதிகாரிகளும் ஆளும் கட்சி ஊழியர்களும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

போராட்ட இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் நஹித் இஸ்லாம் சிறையில் இருந்து வந்த பிறகு பிபிசியிடம் பிரத்தியேகமாக பேசினார்.

அவர் இயக்கத்தின் ஒரே தலைவர் இல்லை என்றாலும், அவர் நிச்சயமாக மிக முக்கியமானவர்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தால் நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?
ஜூலை 21, 2024 அன்று டாக்காவில், அரசு வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நாட்டின் சில பகுதிகளில் வன்முறை வெடித்ததால், ராணுவத்தின் வீரர்கள் ஊரடங்கு உத்தரவின் இரண்டாவது நாளில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டாக்காவில் உள்ள முன்னாள் இந்தியத் தூதுவர் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த தூதர் ரிவா கங்குலி தாஸ், வங்கதேசத்தின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை என்றார். குழப்பமாகவும் புதிராகவும் உள்ளது என்று அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் பிபிசி பங்களாவிடம் கூறுகையில்: “ஷேக் ஹசினா அரசாங்கம் அசைக்கப்பட்டு விட்டதாக நான் நம்பவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“இப்போது உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை வெளியிட்டுள்ளது, அடிப்படையில் மீண்டும் ஒதுக்கீடு முறையை சீர்திருத்துகிறது, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டிய அவசியமில்லை. ”

“அவர்கள் தங்கள் வகுப்புகளுக்குத் திரும்புவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன், மேலும் சில நாட்களில் இயல்புநிலை மீண்டும் தொடங்கும்.”

மற்றொரு ஆய்வாளரும், டாக்கா பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் சீர்குலைவுகள் துறையின் தலைவருமான ஷர்மின் அகமது, “விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால், தற்போதைய பகுத்தறிவு போராட்ட இயக்கம் ஒரு அராஜக குழுவால் தாக்கம் பெற்று, அதிக உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ” என்று எச்சரித்தார்.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?
ஜூன் 2024 இல் இந்தியப் பிரதமர் மோதியுடன் பிரதமர் ஹசீனா.
வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?
ஊரடங்கு உத்தரவின் இரண்டாவது நாளில் கவச வாகனத்தில் ரோந்து சென்ற வங்கதேச ராணுவ உறுப்பினர்கள்

இந்தியாவின் நிலைப்பாடு

வங்க தேசத்தின் அண்டை நாடான இந்தியா, சர்வதேச அளவில் கடந்த பத்து ஆண்டுகளாக மேலாக ஷேக் ஹசினா ஆட்சியின் வலிமையான ஆதரவாளராக இருக்கிறது, எல்லை தாண்டிய நிலைமையைக் கவனித்து வருகிறது.

முன்னதாக வெள்ளிக்கிழமை, இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் வங்கதேசத்தின் நிலைமை குறித்து கேட்டபோது, ​​”இது அந்த நாட்டின் உள்விவகாரமாக நாங்கள் கருதுகிறோம்.” என்றார்.

இருப்பினும், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக கூறினார். இது இந்தியா தனது அண்டை நாடுகளில் ஏற்படும் ஆபத்தான சுழல்களிலிருந்து விலகி இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

Previous Story

வங்கதேசத்தில் மீண்டும்  மாணவர் போராட்டம், 50 பேர் மரணம்

Next Story

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!  இடைக்கால அரசு - ராணுவ தளபதி