இலங்கை-தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா நிறைவு.

-யூசுப் என் யூனுஸ்-

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முயற்ச்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கை-தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா 07.02.2022 திங்கள் துவங்கி 10.02.2022 இன்று வியாழக் கிழமை ஒலுவில் வளாக மண்டபத்தில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வுகள் எட்டு அமர்வுகளாக பிரதான மண்டபத்தில் இடம் பெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளில் மொத்தமாக 2621 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 ஆம் அமர்வில்  பிரயோக விஞ்ஞானங்கள் , பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த 475 பேரும்

2 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 219 பேரும்,

3 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும்,

4 ஆம் அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச் சேர்ந்த 329 பெரும்,

5 ஆம் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 313 பேரும்,

6ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 277 பேரும்

7 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும்

8 ஆம் அமர்வில் கலை, கலாச்சார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

அத்துடன், 4 பேர் முதுதத்துவமானிப்பட்டங்களையும், 23 பேர்வியாபார நிருவாக முதுமானிப்பட்டங்களையும், 2 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெறவுள்ளனர்.

இதேவேளை இப்பொதுப்பட்டமளிப்பு விழாவில், பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.தில்லை நாதன், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகிய இருவருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

சிறுமிக்கு கல்லீரல் தானம்; இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது

Next Story

கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த கணவர்