வேலன் சுவாமி நல்ல தெரிவு!

-நஜீப்-

Tamils | Today's latest from Al Jazeera

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை மீண்டும் தேசிய சர்வதேச மட்டத்தில் தூக்கிப் பிடிப்பதற்கு அல்லது கவனத்தை ஈர்ப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் பகிஸ்காரிப்பு அல்லது ஒரு பொது வேட்பாளர் நல்ல முயற்சி. நாமும் கடந்த காலங்களில் இது பற்றி பேசி இருக்கின்றோம்.

ஆனால் இந்த வேட்பாளருக்கு உள்ளேயும் வெளியேயும் நிறையவே சவால்கள்-எதிரிகள் வருவார்கள் என்பதும் தெளிவு. மூத்த அரசியல்வாதிகள் இ;ப்படியான ஒரு கருத்து சமூகத்தில் வந்த துவக்கத்திலே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் துவங்கினார்கள்.

குறிப்பாக ஐயா சம்பந்தன் இது தெற்கு இணக்க அரசியலுக்கு உதவாது. நிலமையை மேலும் சிக்கலாக்கி விடும் என்று ஆதங்கப்பட்டார். ஆனால் இவர் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று எத்தனை முறை ஏமாந்தார்-சமூகத்தை ஏமாற்றினார் என்பது தமிழர்கள் அறிவார்கள். இது போல இன்னும் பலர் இருக்கின்றார்கள்.

Transitional Justice, Refugees and IDPs in Post War in Sri Lanka – Groundviews

தெற்கில் ஜனாதிபதியாக வர எதிர்பார்க்கும் சஜித், ரணில் போன்றவர்களும் இதனை ஆதரிக்க மாட்டார்கள். மேலும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் நிகழ்ச்சி நிரல்கள் எப்படி இருந்தாலும் பொதுவாக வேலான் சுவாமி உள்ளதில் நல்ல தெரிவு!

நன்றி: 12.05.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

ஜனாதிபதி தேர்தலில் 50 பிளஸ் ஒரு மாயை!

Next Story

முஸ்லிம்கள் குறித்த மோதி:  தேர்தல் ஆணையம் மௌனம்!