மொத்த ரஷ்ய விமானப்படையும் மாயம்? ஸ்தம்பித்து போன அமெரிக்கா! 

உக்ரைன் போரில் ரஷ்யா செய்து வரும் ஒரு செயல் அமெரிக்காவை குழப்பி உள்ளது. அமெரிக்காவை மட்டுமின்றி பல்வேறு மேற்கு உலக நாடுகள், சிஐஏ போன்ற உளவு அமைப்புகளையும் கூட குழப்பி உள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உச்சம் தொட்டுள்ளது. ரஷ்ய படைகள் தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் வெளியே 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசை கட்டி நிற்கிறது. 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இங்கு பீரங்கிகள் வரிசையாக நிற்கின்றன.

இந்த பீரங்கிகள் எல்லாம் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி உக்ரைன் மீது பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் ரஷ்யாவின் பிளான் அதுவாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள்.

விமானப்படை

இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவின் விமானப்படை இந்த போரில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது அதிக கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த போரில் இதுவரை ரஷ்யா குறைவான விமானங்களையே பயன்படுத்தி உள்ளது. அதிலும் அதிக ஆற்றல் இல்லாத பழைய சுகோய் மாடல் விமானங்களை மட்டுமே ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவிடம் இருக்கும் பல புதிய மாடல் சுகோய் விமானங்கள் களத்திற்கே வரவில்லை. போரின் முதல் நாளே ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் விமானப்படை இருக்கும் தளங்களை அடித்து நொறுக்கியது.

உக்ரைன் தாக்குதல்

இதனால் உக்ரைனின் பல்வேறு போர் விமானங்கள், விமான ஓடுதளங்கள் கடும் சேதத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக அடுத்து ரஷ்யா கண்டிப்பாக ரஷ்யா தனது விமானப்படையை களமிறக்கி கடும் தாக்குதலை நடத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. உக்ரைனின் விமானப்படை பெரிய சேதம் அடைந்ததால் ரஷ்யா தனது விமானப்படையை இறக்கி வானத்தை பிடித்து எளிதாக உக்ரைனை பிடித்க்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் ரஷ்யா தனது விமானப்படையை பெரிதாக பயன்படுத்தவில்லை. அதேபோல் உக்ரைன் வான் பகுதியையும் ரஷ்யா இன்னும் பிடிக்கவில்லை. உலக நாடுகளை, சிஐஏ அமைப்பை கூட இந்த சம்பவம் குழப்பி உள்ளது.

ரிஸ்க் வேண்டாம் – குழப்பம்

ரஷ்யா ஏன் இப்படி செய்கிறது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் ரஷ்யா இப்படி செய்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கேள்வி அமெரிக்காவிடம் எழுந்துள்ளது. ரஷ்யாவிடம் உக்ரைனை விட ராணுவ, விமானப்படை பலம் உள்ளது. ஆனால் உக்ரைனோ தன்னிடம் இருக்கும் சிறிய அளவிலான விமானப்படையை கூட களமிறக்கி உள்ளது. உக்ரைனில் பல இடங்களில் உக்ரைன் விமானப்படை தாழ்வாக பறந்து ரஷ்ய படைகள் மீது தாக்கி வருகிறது.

காணவில்லை

இது ரஸ்யாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரஷ்ய தரைப்படைகள் விமானப்படை உதவி இன்று முன்னேறி செல்ல முடியாமல் திணறி வருகிறது. ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் ரஷ்ய விமானப்படைகள் அதன் தரைப்படைக்கு உதவி செய்ய வரவில்லை. உக்ரைனின் மிசைல்களுக்கு அஞ்சி இப்படி ரஷ்யா பின்வாங்கிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு உண்மையான காரணம் தெரியவில்லை.

குழப்பமோ குழப்பம்

உண்மையான காரணம் இப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. உக்ரைன் வான் பகுதியை இப்போதும் உக்ரைன் விமானப்படைதான் கட்டுப்படுத்தி வருகிறது. உக்ரைனிடம் இருக்கும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் ஒரு சில பழைய விமானங்களையும் கூட உக்ரைன் அடித்து காலி செய்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் ரஷ்யா தனது முழு விமானப்படையை இறக்காமல் அமைதி காத்து வருகிறது. உலகின் பல நாடுகளுக்கு விமானத்தை அனுப்பிய ரஷ்யா தன்னுடைய விமானப்படையை ஏன் இப்படி வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஒற்றுமையும் இல்லை

இது ரஷ்யாவிற்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். ரஷ்யாவிடம் தரைப்படை அதிக சேதத்தை சந்திக்கும். அதேபோல் போர் செல்ல செல்ல உக்ரைனுக்கு மற்ற நாடுகள் உதவும். ரஷ்யாவிற்கு இது பொருளாதார ரீதியாக சேதத்தை உண்டாக்கும். உக்ரைன் போரில் தொடர்ந்து ஓங்கும். அதன்பின் கடைசியாக விமானப்படையை ரஷ்யா பயன்படுத்தினாலும் அதனால் பெரிய பலன் அளிக்காது.

ரஷ்ய தரைப்படை

இன்னொரு பக்கம் ரஷ்யாவின் விமானப்படைக்கும் தரைப்படைக்கும் போதிய ஒற்றுமை இல்லை. விமானப்படை ஒரு இடத்தில் இருக்கிறது . தரைப்படை ஒரு இடத்தில் இருக்கிறது. அவர்கள் இடையே சரியான் பிளானிங் இல்லை. ஒருவேளை விமானப்படை களமிறங்காமல் இருக்க அவர்களுக்கு உள்ளே நிலவும் பூசல் கூட காரணமாக இருக்கலாம். என்ன நடக்கிறது என்று சரியாக சொல்ல முடியவில்லை.. ஆனால் ஏதோ சரியில்லை என்று ரஷ்யா பற்றி சிஐஏ தெரிவித்துள்ளது.

விளக்கம் என்ன

ரஷ்யா இப்படி விமானப்படையை அதிகம் பயன்படுத்தாமல் இருக்க பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது.

  1. ரஷ்யாவிடம் போதிய அனுபவம் மிக்க பைலட்டுகள் இல்லை. அதேபோல் ரஷ்யாவின் நவீன விமானங்கள் இன்னும் முழுமையாக தயார் நிலையில் இல்லை. பழைய விமானங்கள் சிரியாவில் போரிட்டு இப்போது நல்ல கண்டிஷனில் இல்லை.
  2. ரஷ்யா பொறுத்திருந்து பின்னர் உக்ரைனை தாக்கும். இப்போது பேச்சுவார்த்தை, உலக நாடுகளின் ரியாக்சனை பார்க்க விட்டு புடிக்கிறது.
  3. மற்ற உலக நாடுகள் வந்து பெரிய போர் தேவைப்பட்டால் விமானம் தேவைப்படும் என்று ரஷ்யா இப்போது விமானங்களை பயன்படுத்தவில்லை.
  4. உக்ரைனின் மிசைல்களிடம் போர் விமானங்களை இழக்க கூடாது. முதல் நாளே 4 விமானங்களை இழந்ததால் அது மீண்டும் நடக்க கூடாது என்று ரஷ்யா பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. உண்மையான காரணம் என்ன என்பது ரஷ்யாவிற்கே வெளிச்சம்!

 

Previous Story

காட்டுப் பஞ்சாயத்து பாணியிலான 'பாடசாலை நிருவாகங்கள்' நெருக்கடிகளும் ஆபத்துக்களும்!

Next Story

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்