திரிசங்கு நிலையில் தேர்தல்!

-நஜீப் பின் கபூர்-

வாயடைத்துப் போனார் தேர்தல் ஆணைக்குழு அதிகாரி!

இந்திய-அணுர நெருக்கம் தமிழரில் தாக்கத்தை தரலாம்!

முதலில் வருகிற தேர்தல் கொண்டு வரும் சேதாரங்கள்!

திரிசங்கு நிலையில் முடிவு எடுக்க முடியாமல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அல்லது இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் இருக்கின்ற அதிகார வர்க்கம் என்று நாம் இங்கு பேசுகின்ற விடயம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் இக்கட்டான நிலமையை கோடிட்டு காட்டுகின்ற செய்திகளாக அமைய இருக்கின்றது.

அத்துடன் இந்த விவகாரத்தில் எப்படி முகம் கொடுப்பது; தேர்தலைத் தவிர்க்க என்னவெல்லாம் பண்ண முடியும். அதற்கான குறுக்கு வழிகள்தான் என்ன? ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு சர்வஜன வக்கெடுப்பை நடாத்தி நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை கொடுத்து மேலும் ஒரு வருடத்தக்கு அதிகாரத்தில் இருப்பது போன்ற யோசனைகள் இதில் கிடப்பில் இருக்கின்றன.

Ranil Wickremesinghe: The six-time Sri Lankan PM who became president

இதனைச் செய்வதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் சர்வஜன வாக்கொடுப்புக்கும் போக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது என்று தெளிவாக யாப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதற்கு இன்னும் ஏதாவது குறுக்கு வழிகள் இருக்கின்றதா என்று சட்ட வல்லுணர்களை வைத்து தற்போது அதிகார வர்க்கத்தினர் ஆலோசனைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த எந்த விடயத்திலும் ஆரோக்கியமான பதில்கள் அவர்களுக்கு இருப்பதாக இதுவரை தெரியவில்லை. எனவே ஆளும் தரப்பினர் தேர்தல் விடயத்தில் திரிசங்கு நிலையில் இருப்பது சிறுபிள்ளைக்குக் கூடப் புரிகின்றது. ஊடகங்களுக்கு எதிரான கடும் சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக நீதி மன்றம் வழங்கி இருந்த பல திருத்தங்களைக்கூட தற்போதய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நீதி மன்றத் தீர்ப்புக்களைகூட மதிக்கத் தயாராக இல்லை. எனவே இவர்கள் அரசியல் யாப்பில் சொல்லப்படுகின்ற விதி முறைகளை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது.

இந்த நிலையில் தேர்தல் நடக்குமா நடக்காதா? முந்தி வருவது ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? இந்தக் கேள்விகள்தான் அரசியல் வட்டாரங்களில் இன்று பரபரப்பாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை எவராலும் தடுக்கவோ தவிர்க்கவே முடியாது அது நடந்துதான் ஆகவேண்டும் என்று உறுதியளித்திருக்கின்றார். ஜனாதிபதி ரணில் இந்திய ஊடகங்களிடம் பேசும் பேது இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் 2025ல் பொதுத் தேர்தலும் நடக்கும,; பொதுத் தேர்தலுக்கான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்று அந்த சந்திப்பில் மேலும் கூறி இருக்கின்றார்.

Politics, democracy and community leadership intertwined – Deshapriya – The Island

ஜனாதிபதி ரணில் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடக்கும் என்று நமக்கு முன்பு சொல்லி இருந்தார். அதனை ஊடகங்கள் அப்போது கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இன்று பொதுத் தேர்தல் அடுத்த வருடம் என்று ரணில் பல்டியடித்திருக்கின்றார். மேலும் மாகாணசபைத் தேர்தல் விடயத்திலும் தமிழ் அரசியல்வாதிகளையும் இந்தியாவையும் இப்படி பலமுறை ரணில் ஏமாற்றியதும் அனைவரும் அறிந்ததே. இது போன்று ஜனாதிபதி ரணில் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறையவே நாம் பட்டியலிட முடியும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு விகாரத்திலும் அப்படித்தான் அவரது கதைகள் அமைந்திருந்தன. பொருளாதார திட்டங்களிலும் முன்னுக்குப் பின் முரணான கதைகளும் நிறையவே இருக்கத்தான் செய்கின்றது. ஜனநாயகம் பற்றி நிறையவே பேசுகின்ற அவர் தற்போது சமூக ஊடகங்களுக்கு மூக்குக் கயிறு போட சட்டங்களை இயற்றி வருகின்றார். ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்புப் போன்றவை இதனை வன்மையாகக் கண்டித்திருந்தாலும் ஆளும் தரப்பினர் அதனை கண்டு கொள்ளாதது மட்டுமல்ல அது நமது உள்நாட்டு விவகாரம் இதில் வெளியார் தலையிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற பல அமைச்சர்கள் பகிரங்கமாகவே பேசி வருகின்றார்கள். எனவே ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடும் இதுதான் என்பது இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் ரணிலுக்கு மிஸ்டர் கிளின் என்ற ஒரு பட்டமும் இருந்தது. அன்று அப்படி அவரைச் சொன்னவர்கள் இன்று அதற்காக நாம் வெக்கப்படுவதாக பகிரங்கமாகவே மேடைகளில்  பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவரது கையாட்கள் ஒரு சிலர்தான் இன்றும் சில காலத்துக்கு அவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லிக்  கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் அவரது கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக நீங்கள் போட்டிக்க வருவீர்களா என்று நெருக்கமானவர்கள் கோட்டதற்கு வருகின்ற நாடாளுமன்ற அமர்வில் இது பற்றிய ஒரு சிக்னலைத் தருவதாக சொல்லி அங்கிருந்து கடுப்புடன் வெளியேறி இருந்தார். ஆனால் எந்த சிக்னலும் அவரிடமிருந்து சொன்னபடி வரவில்லை. இதனை நாம் முன்பு சுட்டிக் காட்டி இருந்தோம்.

Commissioner General of Elections Saman Sri Ratnayake – The Island

அண்மையில் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்டு வேட்பு மனுவும் ஏற்கப்பட்ட நிலையில் அதிகாரிகளை வைத்து உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த பணம் இல்லை, பாதுகாப்புக் கொடுக்க போதி அளவு பொலிசார் இல்லை என்று அறிவித்து தேர்தலை காலவரை இல்லாது தள்ளிப் போட்டது அரசாங்கம் அதன் பின்னணியில் இருந்தது ஜனாதிபதி ரணில்.

ஜனாதிபதித் தேர்தல் இது போன்று உரிய காலத்தில் நடந்துதான் ஆகவேண்டும் என்று அரசியல் யாப்பு சொன்னாலும் இதே காரணத்தை வைத்து ஜனாதிபத் தேர்தலை ஆட்சியாளர்கள் தள்ளிப் போட்டால் நீங்கள் என்ன பண்ண முடியும் என்று ஒரு ஊடவியலாளர் அங்கு கேள்வி எழுப்பிய போது தடுமாறிப் போனார் தேர்தல் ஆணைக் குழு ஆணையாளர் சமன் சிரி இரத்நாயக்க.

அவர் அதற்குக் கொடுத்த பதில் ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கவில்லை. இதனை எதிரணி பிரதான கொரோடா லக்ஸ்மன் கிரி எல்ல நாடாளுமன்றத்திலும் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார். எனவே அதிகாரிகளை வைத்து தேர்தலுக்கு ஆப்பு வைக்க இருக்கும் ஆபத்து ஜனாதிபத் தேர்தலிலும் ஏனைய தேர்தல்களிலும்  இருக்கத்தான் செய்கின்றது.

ஆளும் தரப்பினரே தமக்கு செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். அதே நேரம் தற்போது சமூக ஊடகங்கள் சொல்வது போல அணுரகுமாரவுக்கு நாட்டில் பெரும் செல்வாக்கு இல்லை. இது தொடர்பாக வருகின்ற கருத்துக் கணிப்புக்கள் போலியானது என்று அவர்கள் பேசி வருகின்றார்கள். அப்படியானால் ஏன் தேர்தலுக்கு அஞ்சுகின்றீர்கள் எனக் கேட்டால் அதற்குப் பதில் அவர்களிடத்தில் இல்லை. இந்திய அணுராவை அழைத்துக் கொடுத்த கௌரவத்தால் அவர்களின் செல்வாக்கு மேலும் உயர்ந்து உறுதியாகி ஆளும் தரப்பினருக்கும் பிரதான எதிரணிக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

UPCOUNTRY TAMIL POLITY SHOWS THE WAY? - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

ஏற்கெனவே சிங்கள சமூகத்தின் மத்தியில் ஜேவிபி செல்வாக்கு மேலோங்கி இருக்கின்ற நிலையில் இந்தியவின் செயல் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தினர் மத்தியில் அணுராவுக்கு சாதகமான ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தக் கூடும். கடந்த கால ஆட்சியாளர்களினால் தொடர்ச்சியாக வடக்கு கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் காலங் காலமாக தாம் ஏமாற்றப் பட்டதற்கு அவர்கள் வருகின்ற தேர்தல்களில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து முன்னைய ஆட்சியாளர்களுக்கு ஒரு தண்டனையை வழக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. முஸ்லிம் பிரதேசங்களில் இது வரை நடைபெற்ற ஜேவிபி. கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருவதையும்  அவதானிக்கத் தக்கதாக இருக்கின்றது.

சிறுபான்மை கட்சிகளை வைத்திருப்போர் வருகின்ற தேர்தல்களில் தமக்கு எதையுமே பெற்றுத் தர மாட்டார்கள் என்பதனை அந்த சமூகத்தினர் நன்கு அறிவார்கள். தமது அரசியல் தலைமைகள் தேசிய கட்சிகளுடன் போடுகின்ற கூட்டணிகளினால் சமூகத்துக்கு எதுவுமே  நடக்க மாட்டாது, அதனால் புதிய ஒரு மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவும் இடமிருக்கின்றது. ஆனால் பொதுவாகப் பார்க்கின்ற போது இன்று வரை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித்துக்கு சாதகமாகத்தான் சிறுபான்மை வாக்காளர்கள் இருந்து வருகின்றார்கள் என்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

இப்போது முந்தி வரும் தேர்தல் கொண்டு வருகின்ற சேதாரங்கள் தொடர்பான கணிப்புக்களை ஆளும் மொட்டுக் கட்சியினர் ஆழமாக ஆராய்ந்து வருகின்றார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் காலம் முடியும் முன்னர் பொதுத் தேர்தலை தான் நடத்த மாட்டேன் என்று சொல்லி இருந்தாலும் ஆளும் மொட்டுக் கட்சியினரே இப்போது முன்கூட்டி பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதற்குப் பல இடங்களில் மேல் மட்டச் சந்திப்புக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி விட்டு பின்னர் பொதுத் தேர்தலை நடாத்தினால் நாடாளுமன்றத் தேர்தலில்  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கடும் பாதிப்புக்களைக் கொண்டு வரும். ஊடகங்கள் சொல்வது போல அணுரகுமார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு பாரிய வீழ்ச்சி வரும். இதனால் ஆளும் தரப்பிலுள்ள நாமல் விசுவாசிகள் முன்கூட்டி பொதுத் தேர்தலுக்குச் சென்றால் தமக்கு தோல்வி வந்தாலும் அது கௌரவமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

மேலும் அணுர ஜனாதிபதியானாலும் அவரை கட்டுப்படுத்த அல்லது தமது அரசியல் இருப்பை முன்னெடுக்க தமக்கு கிடைக்கின்ற உறுப்பினர்கள் போதுமாக இருப்பார்கள் என்று ஆளும் தரப்பினர் நம்புகின்றார்கள். சில வேலையில் இன்று ரணிலுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்வது போல சஜித் தரப்புடன் பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஒரு அரசியல் உடன்பாட்டை செய்து கொண்டு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு வரலாம் என்று அவர்கள் கணக்குப் போடவும் இடமிருக்கின்றது. இது யதார்த்தமும் கூட.

அடுத்து ஜனாதிபத் தேர்தலுக்கு யார் வேட்பாளர் என்ற விடயத்தில் ஆளும் மொட்டுக் கட்சியில் நாம் கடந்த வாரம் சொன்னது போல பெரும் குழப்ப நிலை நீடிக்கின்றது. கட்சி மாநாட்டில் காட்டப்பட்ட தம்மிக்க பெரேரா தனக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றார். அப்படி கிடைத்தாலும் ஆளும் தரப்பில் வேறு எவரும் வேட்பாளராக வரக்கூடாது அப்படி அமைந்தால் மட்டுமே தான் போட்டிக்கு வருவேன் என்று கூறுகின்றார் தம்மி.

தற்போதய ஜனாதிபதி ரணில் தனக்கு ஆளும் மொட்டுக் கட்சி வேட்பளர் பதவி தரவேண்டும் அப்படித் தந்தாலும் தான் பொது வேட்பாளராகத்தான் பரப்புரை பண்ணுவேன் என்று நிற்க்கின்றார். மொட்டுக் கட்சியில் வேட்பாளராக வருவதாக இருந்தால் எமது தலைவர்களான மஹிந்த மற்றும் பசிலுடன் முதலில் பேசுங்கள் எம்மை அழைத்து ஜனாதிபத் தேர்தல் பற்றி இங்கு பேசுவதில் அர்த்தம் இல்லை மொட்டுக் கட்சி செயலாளர் சாகல இரத்நாயக்க  ரணில் முகத்திற்கே ஒரு முறை நேரடியாகச் சொல்லி இருந்தார்.

ஆனால் ரணிலை ஆளும் தரப்பு ஜனாதபதி வேட்பாளராக களத்துக்குக் கொண்டு வந்தால் தமக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் நம்புகின்றார்கள். அதே நேரம் ரணில்தான் ஜனாதிபத் தேர்தலுக்கு நமது தரப்பில் வேட்பாளராக வருவதற்கு மிகப் பொறுத்தம் என்று மொட்டுத் தரப்பில் பேசுவோரும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அதே நேரம் குறைந்தது நாமலையாவது ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டுவர வேண்டும் என அங்குள்ள மற்றுமொரு தரப்பினர் எதிர் பார்க்கின்றார்கள். ஆனால் தேர்தல் முடிவெடுக்கத் தயங்குகின்ற ஒவ்வொரு நொடியும் ஆளும் மொட்டுக் கட்சிக்கு பெரும் சரிவைத்தான் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. இதனை அங்குள்ள முக்கியஸ்தர்கள் மஹிந்த ராஜபக்ஸாவுக்கு சுட்டிக் காட்டி வருகின்றார்கள். எனவே பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியதும் தேர்தல் தொடர்ப்பில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு மொட்டுக் கட்சியினர் வர இடமிருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம்.

இன்று மொட்டுக் கட்சியிலுள்ள பலர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர். இருப்பவர்கள் லன்ச அணி, பிரசன்ன தரப்பு, நாமல் சகாக்கள், மதில் மேல் நிற்போர். காசுக்காகத் தீர்மானங்களை எடுப்போர்  என்று பல குழுக்கள் அங்கு இருக்கின்றார்கள். இவர்களை முதலில் ஐக்கியப்படுத்துவதுதான் இப்போது மொட்டுக் கட்சி பிரதானிகளின் முதல் பணியாக இருக்கின்றது.

பிரதான எதிர்க் கட்சியாக இருக்கின்ற சஜித் அணி அதிகமான எதிரணி உறுப்பினர்களை தம்வசம் வைத்திருந்தாலும் அந்தக் கட்சிக்குள் கொள்கை ரீதியில் ஒரு இணக்கப்பாடு இல்லை. இதனால் அவர்கள் ஆளுக்கொரு முடிவுகளை அங்கு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்களில் பலர் ஆளும் தரப்பில் வந்து இணைந்து கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள் என்று ராஜபக்ஸ தரப்பில் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் நின்று தேர்தல் கேட்டவர்களில் பலர் இன்று அந்தக் கட்சியில் இல்லை. மேலும் ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்கின்ற போது சஜித் அணியிலுள்ள பலரை அங்கு ரணில் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கின்றார். இதிலிருந்து சஜித் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லை என்பது உறுதியாகின்றது.

நன்றி: 18.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தனித்துவ அரசியல்!

Next Story

சீருடை-பாடப் புத்தகங்கள்:  அமைச்சின் அறிவிப்பு