தாலிபன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு தந்திருக்கிறார்கள்.

தாலிபன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு தந்திருக்கிறார்கள்.. இது தொடர்பான செய்திதான் தற்போது இணையத்தில் பரபரப்பை தந்து வருகிறது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.. பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது..

Heart Breaking incident by Taliban and Do you know what happened in Afghanistan Football Stadium

மறுப்புகள்

இதையடுத்து, தாலிபன் அரசை கண்டித்து, மாணவ, மாணவிகள் போராட்டத்திலேயே ஈடுபடும் அளவுக்கு சென்றுவிட்டனர். கல்வி மட்டுமல்லாமல் மற்ற உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, புர்கா அணியாமல் வெளியே போகக்கூடாது, சிறுவர்கள் கேம் சென்டருக்கு போகக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போகக்கூடாது, தோட்டங்களுக்குகூட போகக்கூடாது..

புல்வெளி அமைந்துள்ள ஓட்டல்களுக்கு பெண்கள் போகக்கூடாது, பியூட்டி பார்லர் போகக்கூடாது, ஆண் டாக்டரை பெண்கள் அணுகக்கூடாது இப்படி பல உத்தரவுகளும் தாலிபன்களால் போடப்பட்டன.  தண்டனைகள்:

இதற்கெல்லாம் ஐநா உட்பட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தாலும், குற்றவாளிகளுக்கு தாலிபன்கள் வழங்கப்படும் தண்டனையானது, உலக மக்களையே அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிடுகிறது.. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கசையடி தருவது, கை, கால் துண்டிப்பது, உயிரை எடுப்பது போன்ற கொடூர தண்டனைகள் தரப்பட்டு வருகின்றன.. கடந்த வருடம்கூட, 4 திருடர்களின் கைகளையே துண்டாக வெட்டிவிட்டார்கள்..

இதோ இப்போதும் ஒரு தண்டனை அரங்கேற்றப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில், கஜினி நகர் கால்பந்து மைதானத்தில், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை தலிபான் அதிகாரிகள் பகிரங்கமாக சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.. 6000 வெள்ள நிவாரணம்.. சென்னையில் 5.5 லட்சம் குடும்பங்களுக்கு ஏமாற்றம்.. என்ன நடக்கிறது?

9 facts on women's rights in Afghanistan

தண்டனைகள்

வழக்கமாக இதுபோன்ற தண்டனையை நிறைவேற்றும்போது, ஒட்டுமொத்த பேரையும் திரண்டு வந்து, தண்டனையை காணும்படி தாலிபன்கள் அழைப்பு விடுப்பார்கள்.. அப்படித்தான், இந்த பகிரங்க தண்டனையை நேரில் காண ஆயிரக்கணக்கான ஆண்கள், கால்பந்து மைதானத்தில் கூடியிருந்தனர்.. அப்போது, தாலிபன் உச்சதலைவரான ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் கையொப்பமிடப்பட்ட மரண உத்தரவை, உச்சநீதிமன்ற அதிகாரியான அதிகுல்லா தர்வீஷ் உரக்க வாசித்தார்.

அவர் தண்டனையை வாசித்து முடித்ததுமே, கொலைக்குற்றவாளிகள் 2 பேருமே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். கண்ணுக்கு கல்: கிசாஸ் எனப்படும் “கண்ணுக்குக் கண்” தண்டனை உட்பட அடிப்படைவாத சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக தாலிபன்கள் நடைமுறைப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்..

கொலை குற்றம் சாட்டப்பட்ட நபர்களை, பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதும், கை, கைகால்களை துண்டாக வெட்டுவதும், சுட்டுக்கொல்வதும் பெருதத அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி வருகின்றன.

கவலை

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளும், கண்டனங்களும் இருந்தபோதிலும், தாலிபான்களின் தண்டனைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் வேலையின்மை, பசி, பட்டினி, நோய், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிப்பு, தொற்று நோய் பரவல் என பல பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும்நிலையில், மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியும் அங்கு ஏற்பட்டு வருவதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன..!!

Previous Story

நமக்கு கடும் போட்டி எஸ்பி!

Next Story

அழைப்பும் நிராகரிப்பும்!