டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு! இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கான் போட்டி

க.போத்திராஜ்

உலகக் கோப்பை டி20 போட்டியின் அரையிறுதிச் சுற்று நெருங்கிவிட்டநிலையில், இன்னும் எந்தெந்த அணிகள் தகுதி பெறப் போகின்றன என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

எதிர்பாராத தோல்விகள், வரலாற்று வெற்றிகள் ஆகியவை புள்ளிப்பட்டியலில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. உதாரணமாக குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வியால் ஆஸ்திரேலியா நிலை திரிசங்கு நிலையில் விடப்பட்டுள்ளது.

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

குரூப்-2 பிரிவில் அரையிறுதியில் 2 இடங்களுக்கு 3 அணிகள் கடும் கோதாவில் இறங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் காரணம், எதிர்பாரா வெற்றிகள், அதிர்ச்சித் தோல்விகள்தான். மேற்கிந்தியத்தீவுகள் ஆடுகளங்களில் ஜாம்பவான் அணிகளும் சறுக்குகின்றன, கத்துக்குட்டி அணிகள் தங்களின் தனித்திறமையான பந்துவீச்சால் திடீர் வெற்றிகளைப் பெறுகின்றன.

இதனால் அரையிறுதிப் போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் இதுவரை எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியாத நிலைதான் நீடிக்கிறது. இந்திய அணி 2 வெற்றிகள் பெற்றநிலையில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருந்தால், எளிதாக இரு அணிகளும் அரையிறுதியை உறுதி செய்திருக்கும். ஆனால் ஆப்கானிஸ்தானின் வெற்றி, அரையிறுதிக்கான வாய்ப்பை 4 அணிகளுக்கும் விசாலமாக்கி, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பைக்கூட உறுதியில்லாமலாக்கிவிட்டது.

ஒவ்வொரு குரூப்பிலும் அரையிறுதிக்கான வாய்ப்புள்ள அணிகள் குறித்துப் பார்க்கலாம்.

குரூப் 1 – இந்திய அணிக்கு என்ன வாய்ப்பு?

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

இந்திய அணி தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 2.425 நிகர ரன் ரேட்டில் வலுவாக இருக்கிறது. இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்கு எந்தவிதமான சிக்கலின்றி ஒரே வழி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் 6 புள்ளிகளுடன் சிக்கலின்றி முதலிடத்துடன் அரையிறுதி செல்லும்.

ஒருவேளை இந்திய அணி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால் இந்தியா, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். கடைசி லீக்கில் வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் வென்றால் 4 புள்ளிகளுடன் இருக்கும். 3 அணிகளும் 4 புள்ளிகள் பெற்றால் நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்குள் செல்லும்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியைவிட வலுவான நிகர ரன்ரேட்டில் 2.425 என இருப்பதால், இந்திய அணியை வெளியேற்ற வேண்டுமானால், ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெல்ல வேண்டும் அதேசமயம், வங்கதேச அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெல்ல வேண்டும். இது நடந்தால்தான் இந்திய அணியை வெளியேற்ற முடியும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தானை வங்கதேசம் அணி வென்றாலே இந்தியா, ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றும்கூட இரு அணிகளும் 4 புள்ளிகளுடன் தானாகவே அரையிறுதி செல்லும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் தலா 2 புள்ளிகளுடன் முடிக்கும்.

ஆஸ்திரேலியாவை முந்துமா ஆப்கானிஸ்தான்?

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

இந்திய அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றால், ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட்டை முறியடிக்க வங்கதேச அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெல்ல வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒருவேளை கடைசிப்பந்தில் வென்றால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் சேர்த்து, 15.4 ஓவருக்குள் சுருட்டினால் ஆஸ்திரேலிய அணியைவிட நிகர ரன்ரேட்டில் உயரலாம்.

3 அணிகள் போட்டா போட்டி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டால் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி செல்லும். அதேசமயம், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வீழ்த்திவிட்டால் 2 புள்ளிகள் பெறும். ஆக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் தலா 2 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டுக்கு போட்டியிடும்.

இதில் இந்த 3 அணிகளில் ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட் வலுவாக 0.223 என இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல, ஆஸ்திரேலியா 31 ரன்களில் இந்தியாவிடம் தோற்க வேண்டும், இது நடந்தால் ஆப்கானிஸ்தான் ஒரு ரன்னில் வங்கதேசத்திடம் தோற்றாலும் அரையிறுதி செல்லும். ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றதால், நிகர ரன்ரேட் ஆப்கானிஸ்தானுக்கும் குறைந்து வெளியேறிவிடும்.

வங்கதேசம் அரையிறுதி செல்ல, ஆப்கானிஸ்தான் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவேண்டும், அதேசமயம், இ்ந்திய அணியிடம் 55 ரன்களில் ஆஸ்திரேலிய அணி தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், வங்கதேசம் அணி 2வது இடத்தைப் பிடித்து அரையிறுதி செல்லலாம்.

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

ஆஸ்திரேலியா வென்றால்?

இ்ந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வென்று, அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தினால், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 4 புள்ளிகளுடன் அரையிறுதி செல்லும். ஆப்கன், வங்கதேசம் தலா 2புள்ளிகளுடன் வெளியேறும்.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தினால், வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் வென்றால், இந்திய அணி 6 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடனும் அரையிறுதி செல்லும்.

குரூப் 2 – இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் வென்றால்?

இன்று நடக்கும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வென்று, நாளை காலை நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை மேற்கிந்தியத்தீவுகள் வெல்லும் பட்சத்தில் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் முடிக்கும்.

அமெரிக்க அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றதால், மேற்கிந்தியத்தீவுகள் அணி 1.814 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

ஆதலால், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தினாலே போதுமானது, நிகர ரன்ரேட்டில் மேற்கிந்தியத்தீவுகள் அரையிறுதி சென்றுவிடும்.

தென் ஆப்ரிக்காவின் நிகர ரன்ரைட்டைவிட உயர்வாக செல்ல இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வெல்ல வேண்டும். அதேசமயம், மேற்கிந்தியத்தீவுகளிடம் சூப்பர் ஓவருக்குள் தென் ஆப்ரிக்கா தோற்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்துக்குள் அமெரிக்காவை வெல்லாவிட்டால், தென் ஆப்ரிக்கா 4 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் அரையிறுதி செல்லும்.

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா வென்றால்

ஒருவேளை இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அமெரிக்கா அணி வென்றால், மேற்கிந்தியத்தீவுகள் தென் ஆப்ரிக்கா வென்றால் 6 புள்ளிகளுடன் முதலிடத்துடன் அரையிறுதி செல்லும். ஆனால், இங்கிலாந்து, அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் தலா 2 புள்ளிகளுடன் நிகரரன்ரேட்டில் போட்டியிடும்.

160 ரன்களை சேஸிங் செய்யும் முயற்சியில் சூப்பர் ஓவருக்குள் இங்கிலாந்தை அமெரிக்கா தோற்கடிக்க வேண்டும். அதேசமயம் மேற்கிந்தியத்தீவுகள் அணி 43 ரன்கள் அதற்கும் அதிகமான வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றால், நிகர ரன்ரேட் இங்கிலாந்தைவிட சரியும். அமெரிக்காவிடம் மோசமான தோல்வியை இங்கிலாந்து சந்தித்தால் நிகர ரன்ரேட் மோசமாகச் சரிந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அரையிறுதி செல்லும்.

அமெரிக்க அணி அரையிறுதி செல்வது சாத்தியமில்லை என்றாலும் வாய்ப்பை மறுக்க முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அதாவது இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய வைத்து 56 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அல்லது அமெரிக்க அணி 160 ரன்கள் சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் இங்கிலாந்து அணியைவிட நிகர ரன்ரேட்டில் அமெரிக்கா முந்தும். அதேநேரம் தென் ஆப்ரிக்காவிடம் குறைந்தபட்சம் 91 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் தோற்றால் அமெரிக்கா அரையிறுதி செல்வது சாத்தியமாகும்.

இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் என்ன வாய்ப்பு?

தென் ஆப்ரிக்காவை மேற்கிந்தியத்தீவுகள் வீழ்த்தி, இங்கிலாந்தை அமெரிக்காவை தோற்கடித்தால், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதி செல்லும். அமெரிக்கா, இங்கிலாந்து தலா 2 புள்ளிகளுடன் வெளியேறும்.

Previous Story

மாபெரும் கட்டுரை, சித்திரப் போட்டிகள்-2024

Next Story

புர்ஜ் கலீஃபாவில் விளம்பர கட்டணம்?