ஜனாதிபதியை புறக்கணித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!

9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தொடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயப்படி, தொடக்க அமர்வின் பின் சபாநாயகரினால் தேனீர் விருந்து வழங்கப்படும். இதில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் , இன்று இடம்பெற்ற கோட்டாபயவின் தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக புறக்கணித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரையில் , தமிழ் மக்களின் இனப்பிரச்சனை விவகாரம், தீர்வு விடயம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனையென்ற எதுவுமேயில்லையென்பதை போல, கோட்டாபயவின் உரை அமைந்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இன்றைய தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. அத்துடன், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நேரில் சந்தித்த இரா.சம்பந்தன், இது குறித்து கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில், தீர்வு விடயம் குறிப்பிடப்படும் என அரச தரப்பு தகவல் வழங்கியிருந்ததாகதாக கூறப்படும் நிலையில் அந்த தகவலின் அடிப்படையில் இரா.சம்பந்தனும் அதிக எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Previous Story

4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.-இஸ்ரேல்

Next Story

அமைச்சர் கோரிக்கை OUT