சூழ்ச்சிகள் வன்முறைகள் எச்சரிக்கை!

ரணில்-சசி உரையாடல்

நஜீப்

Shasheendra Rajapaksa sworn in as State Minister - Sri Lanka

என்னதான் எதிர் முகாம்களில் இருந்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதி ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்குமிடையே நெருக்கமான உறவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் இது.

தற்போது தனக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத இராஜங்க அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்கி வரும் ஜனாதிபதி ரணில் கடைசியாக ஐந்து பேரை பதவியல் இருந்து விலக்கும் முன்னர், ராஜபக்ஸாக்களின் நல்லுறவைப் தொடர்ந்தும் பேணும் வகையில் பார்த்த காரிம்தான் இது. சமால் ராஜபக்ஸாவின் மகன் சசிந்திர ஒரு இராஜாங்க அமைச்சர்.

அவரை பதவி நீக்கும் முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரணில் பிரதேச அரசியல் கள நிலவரம் பற்றி கேட்க செஞ்சட்டைக்காரர்கள் செல்வாக்குக் கொடி கட்டிப் பறக்கின்றது. நாம் துடைத் தெரியப்பட்டு விடுவோம் என்று சசி கூற கதையை வேறுபக்கம் திருப்பிய ஜனாதிபதி தான் கோல் எடுத்த நோக்கத்தை கூறி இராஜினாமச் செய்யும் வேண்டுகோளை விடுக்க,

நான் மட்டும் அப்படி பதவி விலகுவது சரியில்லை அடுத்தவர்களைப் போல என்னையும் பதவி நீக்கும் படி அவர் ரணிலுக்குச் சொல்லி இருக்கின்றார்.

நன்றி: 15.09.2024 ஞாயிறு தினக்குரல்

சந்தி சிரிக்கும் தமிழரசு!

நஜீப்

S. Shritharan elected as ITAK leader - DailyNews

தமிழ் மக்களின் வரலாற்றுப் பெருமை மிக்க கட்சி தான் இந்தத் தமிழரசுக் கட்சி. ஆனால் இன்று அதன் போக்கு மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிற்து என்பது ஒருபுரம் இருக்க, அதன் செயல்பாடுகளினால் இன்று சந்தி சிரிக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிரிதரன் கட்சித் தலைவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் அந்தக் கட்சிக்குள் சுமந்திரனுக்கு அஞ்சிக் கொண்டுதான் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இது அவர் மீதான ஆளுமையை மக்கள் கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு  நிலை.

கலஞ்சென்ற  சம்பந்தனை சுமந்திரன் எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ அதே போலத்தான் இன்றும் மூத்த தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் மாவை சேனாதிராஜாவையும் அவர் தனது கையாளாகப் பாவிக்கின்றார்.

இதற்கு வன்னியில் சஜித்தை ஆதரிக்க எடுத்த தீர்மனமும் அது விடயத்தில்  மூத்த தலைவர் மாவை மனம் பாதிக்கபட்டவர் பாணியில் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது காட்டுகின்றது. லண்டனில் இருந்து வீராப்பு பேசிய சிரிதரன் நிலையும் இதற்குச் சமாந்திரமாகத்தான் இருக்கின்றது.

எனவே இனம் சார்ந்த தீர்மானங்களில் அரசியல் தலைவர்களை ஆசான்களாக மக்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

நன்றி: 15.09.2024 ஞாயிறு தினக்குரல்

கருப்பை விவகாரம் ஹக்கீம் பல்டி!

நஜீப்

Hakeem seeks probe over cremation of Muslims who died of Covid-19

ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதிகள் வளர்கின்றார்கள் என்று அணுர நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அவர் ஒரு மிகப் பெரும் இனவாதி என்று மு.கா. ஹக்கீம் விமர்சனம் இருந்தது.  இதனைக் கடுமையாக  எதிர்த்த அணுர தனது வார்த்தை புரிதலில் உள்ள தெளிவின்மையால் ஹக்கீம் அப்படிப் பேசி இருக்கலாம். இது விடயத்தில் தனது நிலைப்பாட்டை ஹக்கீம் மாற்றிக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை என்று எச்சரித்திருந்தார் அணுரா. அதன் பின்னர் அப்படியாக ஹக்கீம் எங்கும் பேசவில்லை. அணுர நாடாளுமன்றத்தில் பேசிய போதும் கேள்வி எழுப்பவில்லை. தனது கூற்று சரியா இருந்தால் அதனை அவர் தொடர்ந்துபேசி இருக்க வேண்டும். பின்னர் சந்துரு என்பவருடன் நடந்த ஊடகச் சந்திப்பில் அணுர விளக்கத்தை ஏற்பதாகக் குறிப்பிட்டு நானும் சற்று வேகமாகப் பேசி விட்டேன் என்ற தேரணையில் ஹக்கீம் விளக்கம் கொடுத்திருப்பதுடன் இப்போது அடக்கி வாசிக்கத் துவங்கி விட்டார். மற்றுமொரு இடத்தில் பேசுகின்ற போது அணுரவை ஒரு இனவாதி என்று நான் சொல்ல மாட்டேன் என்றும் ஹக்கீம் அவருக்கு சான்றிதலும்  கொடுத்திருக்கின்றார். இதுதான் ஹக்கீம் அரசியல். எப்படி இருக்கின்றது ஹக்கீமின் அந்தர் பல்டி.

நன்றி: 15.09.2024 ஞாயிறு தினக்குரல்

சூழ்ச்சிகள் வன்முறைகள் எச்சரிக்கை!

நஜீப்

Wahhabism confronted: Sri Lanka curbs Saudi influence after bombings

இது வரை தேர்தல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தாலும் எந்த நேரத்திலும் என்ன உருவிலும் வன்முறைகள் வரலாம் என்ற ஒரு அச்சமும் நாட்டில் இருக்கின்றது. இந்த சூழ்ச்சிகள் உள்நாட்டு வெளிநாட்டு சதிகள் மூலமும் வரலாம்.

எனவே ஒவ்வொரு குடிமகனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது விடயத்தில் பாதுகாப்புத் துறையினரும் அவதானமாக நடந்து பொது மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும். மேலும் வேட்பாளர்களுக்கு எதிரான போலி பிரச்சாரங்கள், சேறுபூசுகின்ற நடவடிக்கைகளும் பரவலாக வரலாம்.

அணுர அதிகாரத்துக்கு வந்தால் முஸ்லிம்களின்  சமய கலாச்சார உரிமைகளுக்கு ஆபத்து-அச்சுறுத்தல். சீனாவில் நோன்பு இல்லை முஸ்லிம்களுக்கு பெருநாள் இல்லை. அணுர வந்தால் இங்கும் அப்படித்தான் என்ற ஹிஸ்புல்லாஹ்வின் சர்ச்சைக்குறிய பேச்சு இன்று சீனத் தூதுவராலயம் வரை போய் இருக்கின்றது.

முஸ்லிம்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட அணுர பற்றிய போலித் துண்டுப்பிரசுரம் என்பன இதற்குச் சான்று. மற்றுமொரு துண்டுப் பிரசுர விவகாரத்தில் கைதானவர்களை பதுள்ளை பொலிசுக்குள் புகுந்து சாமர சம்பத் மீட்டது. அங்கு அவர் நடந்து கொண்ட ஒழுங்கு முறைகள் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகளும் தற்போது துவங்கி இருக்கின்றது.

நன்றி: 15.09.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதித் தேர்தலில் இறுதிக் கட்ட சமர்! வதந்திகளும் சந்தேங்களும்

Next Story

மசூதிக்குள் விநாயகர் சிலை வந்த கதை