கிணற்றுத் தவளைகளின் கணிப்பீடு!

இலங்கையில் நடக்கின்ற தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கருத்துக் கணிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்போர்கள் எல்லோரும் ஊடகக்காரர்கள் என்ற நிலை இருப்பதால் இப்படியான கருத்துக் கணிப்புக்கள் தினம் தோறும் பெரும் எண்ணிக்கையில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. 2ம் பக்கம்

அவற்றை நாம் தவறு என்று ஒரு போதும் சொல்லப் போவதில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் இந்த கருத்துக் கணிப்புக்கள் தாம் சார்ந்த கட்சிக்காக காசுக்காக தொழில் பார்ப்பவர்கள் செய்யும் வேலை. அது கூட பிழையில்லை.

அது அவர்களது பிழைப்பு சார்ந்த செயல்பாடு. ஆனால் பலர் கிணற்றுத் தவளைகளாக இருந்து இந்த கருத்துக் கணிப்புக்களை இன்னும் வெளியிட்டுக் கொண்டு வருகின்றனர். அதனால்தான் நாம் இந்தக் குறிப்பை இங்கு பதிகின்றோம்.

Differences in opinion, growing hostilities or politics as usual? | LSE Research

அப்படிப்பட்ட சில கணிப்புக்களை உதாரணத்துக்காக நாம் இங்கு சமர்ப்பிக்கின்றோம்.

அணுரவுக்கு 80 சதவீதம் சஜித்துக்கு 13 ரணிலுக்கு 5 நாமலுக்கு 2. மற்றுமொரு கணிப்பில் சஜித்துக்கு 65 சதவீதம் அணுரவுக்கு 30 ரணிலுக்கு 3 நாமலுக்கு 2. சதவீதம்.

அடுத்து அணுரவுக்கு 90 சஜித்துக்கு 4 ரணிலுக்கு 4 நாமலுக்கு 2 என்று அவை கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் பிரதேசங்களிலும் சஜித்துக்கு 60 ரணிலுக்கு 20 அணுரவுக்கு 15 நாமலுக்கு 2  என்று அவை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை ஏற்கக் கூடிய கருத்துக் கணிப்புக்களா என்று நாம் இங்கு கேள்வி எழுப்புகின்றோம். சில நடுநிலையான கருத்துக் கணிப்புக்கள் இருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நாம் அடித்துக் கூறுகின்றோம். எந்தவொரு வேட்பாளரும் இன்னும் 50 சதவீதத்தை தாண்டவில்லை.

அதே நேரம் தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளர் வருவது பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாமல் இருக்கின்றது. எனவேதான் நாம் கிணற்றுத் தவளைகளின் கருத்துக் கணிப்புக்கள் என்று இவற்றை நாம் குற்றம் சாட்டுகின்றோம்.

Previous Story

ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் 

Next Story

பாலின பரிசோதனை சர்ச்சை: வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி