“கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க கடை திறந்த இளம்பெண்கள்  “

Wedding and marriage concept. Greeting card for Valentine's Day. Flat style. All objects are isolated.

இளம்பெண்ணை கட்டிப்பிடிக்க வெறும் 44 ரூபாய், முத்தம் கொடுக்க 440 ரூபாய், ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க ரூ.600, ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிக்க 16,100 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த நடைமுறை சீனாவில் தான் உள்ளது.

இப்படி பணம் சம்பாதிக்க இளம்பெண்கள் ஏராளமானவர்கள் ஆர்வமாகி ரோட்டில் கடையை விரித்துள்ளனர். சீனா.. எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நம் அண்டை நாடு.  சீனா அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளையும் விட்டு வைப்பது இல்லை.

இப்படியான இந்த சீனாவில் தான் தற்போது வினோதமான கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதாவது இளம்பெண்கள் பணம் சம்பாதிக்க வினோத வழியை தேர்வு செய்துள்ளனர். அதாவது நம் ஊர்களில் சாலைகளில் நடந்து சென்றால் மளிகை கடை, ஹோட்டல் உள்பட பல கடைகள் அணிவகுத்து இருக்கும்.

அங்கு காய்கறி, மளிகை பொருட்கள், உணவு பொருட்களின் விலை பட்டியல் என்பது எழுதி வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் சீனாவில் ஷென்சென் மற்றும் அதனை சுற்றிய நகரங்களின் தெருக்களின் ஓரங்களில் இளம்பெண்கள் வரிசையாக அமர்ந்துள்ளனர். அவர்களின் முன்பு பல்வேறு விதமான ‛ரேட் கார்டுகள்’ விரித்து வைக்கப்பட்டுள்ளன.

அந்த ரேட் கார்ட் தான் தற்போது விவாதமாகி உள்ளது. அதாவது இளம்பெண்கள் தங்களை முத்தமிட்டு கொள்ளலாம், கட்டிப்பிடித்து கொள்ளலாம், திரைப்படம் பார்க்க அழைத்து செல்லலாம், வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம், ஒன்றாக மதுபானம் அருந்தவும் அழைத்து செல்லலாம் என்று அந்த ரேட் கார்டுகளில் எழுதப்பட்டு உள்ளதோடு, அதற்கென தனித்தனியாக கட்டணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்ள அனுமதி இல்லை. அதாவது தனிமையில் தவிக்கும் நபர்களுக்கு துணையாக இருந்து அன்பை பரிமாறும் வகையில் தான் இந்த சேவையை செய்வதாக இளம்பெண்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கு Companionship எனவும் அவர்கள் பெயர் வைத்துள்ளனர்.

இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பெண் கிடைக்காத அதேவேளையில் திருமண உறவில் இணைய விரும்பாதவர்கள் இளம்பெண்களுடன் அன்பை பரிமாறிக்கொள்ள இது வரப்பிரசாதம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் மற்றொரு தரப்பு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அதாவது பணம் சம்பாதிப்பதற்காக பெண்கள் இந்த அளவுக்கு இறங்கி செல்வதா? இத்தகைய நடவடிக்கையை சீனாவில் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Previous Story

அரச ஓய்வூதியர்களுக்கு 3000/= உதவித்தொகை

Next Story

'கோடி கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த செருப்பை விற்க மாட்டேன்' -  ஏழைத் தொழிலாளி