ஒதுங்கும் சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். அவ்வாறு பதவி விலகல் நடைபெறவில்லை என்றால் தான் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநயாகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் பதவி விலகுவதாக அறிவித்திருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களை இன்று உத்தியோகபூர்வமாக சபாநாயகரிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை.

தான் வெளிநாடு சென்றுள்ளதால் தான் வரும் வரை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்!     அவர் புதிய பிரதமரை நியமிக்க கட்டளை!

Next Story

நம்பகத் தன்மையில்லா பதவி விலகல் கடிதம்!