உலகின் செல்வ செழிப்புமிக்க அமீரக குடும்பம்

ரூ.16000கோடி மாளிகை,

700 கார்கள்

8 ஜெட் விமானங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அல் நஹ்யான் குடும்பம்.

உலகின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அல் நஹ்யான் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது.

எம்பிஇசட் என்று அழைக்கப்படும் சேக் முகம்மது பின் செய்யத்அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என இவரது குடும்பம் மிகப் பெரியது. அவரது குடும்பம் வசிக்கும் மாளிகையின் மதிப்பு ரூ.16000 கோடி ஆகும். 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் இக்குடும்பத்தினர் வசம் உள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் வளத்தில், நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகு சாதன நிறுவனமான ஃபென்டி முதல் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரையில் இக்குடும்பத்தினர் பலதரப்பட்ட தளங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர்.

Here are 9 amazing facts about Abu Dhabi's new Crown Prince

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 94 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை அமைந்துள்ளது. ரூ.16000 கோடி (SL:RS.) மதிப்பிலான இந்த மாளிகையில் சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் தவிர்த்து, பாரீஸ், லண்டன் என உலகின் முக்கிய நகரங்களில் பெரும் சொத்துகளை இக்குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். பிரிட்டனின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.

Previous Story

ஷோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் - சானியா மிர்சா உறவு என்ன ஆனது?

Next Story

மக்கா, மதீனாவுக்கு நிவாரணம் வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்!