உற்ற நண்பர்களிடையே முறுகல்!

-யூசுப் என் யூனுஸ்-

உக்ரைன் போரில்  அதற்கு மிகவும் ஒத்துழைப்பும் உதவிகளும் செய்து வருகின்ற நாடுதான் போலாந்து. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் போலாந்து ஊடாக தானியங்களை ஏற்றுமதி செய்ய உக்ரைன் அனுமதி கேட்ட போது தனது விவசாயிகளுக்கு இதனால் பாதிப்பு என்று அதனை ஏற்க முடியாது என்று போலந்து உக்ரைனுக்கு கூறிவிட்டது.

Poland and Ukraine to Create a Common Transit Zone – PZC - Company  Formation, Shelf Companies, Business Consulting in Poland

தனக்கு இப்படி ஒரு பதிலை போலாந்து தரும் என்று உக்ரைன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதே போன்று இன்னொரு நிகழ்வும் நடந்திருக்கின்றது. இதே போரில் ரஸ்யாவுக்கு பக்க துணையாகவும் அதன் வெற்றியின் நாயகனாகவும் செயல்பட்டு வருவது ஈரான். அவர்கள் இருவருக்கும் இடையில் கூட இப்படி ஒரு மோதல் ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கிய அரசு இராச்சியம் தொடர்பாக ரஸ்யா எடுத்த முடிவால் ஈரான் ரஸ்யாவுக்கு தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றது. தூதுவரை அழைத்து நேரடியாக  அவர்கள் புடினுக்கு இதனை எத்தி வைத்திருக்கின்றார்கள்.

கதை இதுதான் தான் தற்போது வைத்திருக்கின்ற மூன்று தீவுகளின் உரிமம் தொடர்பாக ரஸ்யா யூ.ஏ.ஈ. க்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதால்தான் இந்த மோதல் ஏற்பட்டிருக்கின்றது.

நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாகிஸ்தானியருடன் திருமணமான செய்திக்கு இந்தியப் பெண் அஞ்சு மறுப்பு!ஆனால்...

Next Story

நைஜரில் பதற்றம்:  ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!