இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி பதவி!

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா, ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரை உலகில் 1400 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனைப்படைத்ததோடு, இரண்டு பத்ம விருதுகளையும் பெற்றுள்ள இசைஞானி இளையராஜாவின் கலை இலக்கிய திறமைக்கு கௌரவம் அளிக்கும் வகையில் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி பதவி! குவியும் வாழ்த்துக்கள் | Music Composer Ilayaraja Gets Mp Post

மேலும், திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

குவியும் வாழ்த்துக்கள்….

அந்த வகையில், இளையராஜா எம்பியாக நியமிக்கப்பட்டமைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கம் -இரா. சம்பந்தன் பதில்

Next Story

இலங்கை:  "மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்" - மகாதீர்